அணுகுமுறையை அழகாக்குவீர்
அணுகுமுறையை அழகாக்குவீர்
****************
கட்டுரை எண் 1409
--------------
J . யாஸீன் இம்தாதி
=========
தவறு செய்யும் மனிதனை திருத்துவதாக இருந்தாலும் அம்மனிதனின் சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தாது அநாகரீக வார்த்தைகளை பயன்படுத்தாது தனிமையில் சுட்டி காட்டினால் மட்டுமே அம்மனிதன் அச்சொல்லை சிந்திப்பான்
இதை தவிர்த்து அராஜகத்தை கையில் எடுத்து அநாகரீகமான வழிமுறைகளை கையாண்டால் அதனால் பாதிப்பை சந்திப்பவன் பொறுமை உடைய மனிதனாக இருந்தாலும் திடீரென பொங்கி எழும் நிலை ஏற்படும்
பொருளியல் பலத்தில் குன்றியவனாக இருந்தாலும் அவனது எதிர்ப்பை சமாளிக்க இயலாத சூழ்நிலையை நிச்சயம் சந்திக்க நேரிடும்
உலவியல் ரீதியாக பல சிரமத்தை அனுபவிக்க நேரிடும்
காரணம் அநீதமாக பாதிக்கப்பட்டவனின் பக்கமே இறைவனின் கருணையும் உதவியும் மறைமுகமாக இருக்கும்
இதை கருத்தில் கொண்டு வாழ்வியலை அமைப்போம் இன்ஷா அல்லாஹ்
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ
முஃமின்களே நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள்
எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம்
நீதி செய்யுங்கள் இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும்
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 5:8)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment