தராவீஹ் ஹாபிளும் மக்களும்

         தராவீஹ் ஹாபிள்களும்
            மக்களின் நிலையும்

                  ****************
           கட்டுரை எண் 1407
                        --------------
         J . யாஸீன் இம்தாதி
                       =========
இரவு தொழுகையில் ஹாபிள்களை (குர்ஆன் மனனம் செய்தோரை) இமாமாக  நியமிப்பது இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை என்ற போதும் பரவலாக ஹாபிள்களை ஏற்பாடு செய்வது நடைமுறையில் காண முடிகிறது

ஆனால் இந்த ஏற்பாடுக்கு மதிப்பளிக்க கடமைபட்ட மக்களின் நிலை எவ்வாறு உள்ளது  ?

ஹாபிள் முதல் ரக்அத்தில் சூரா ஓதி முடித்து ருகூஃ போகும் வரை அமர்ந்திருந்து அதன் பிறகே அநேக மக்கள் ஜமாத்தில் இணையும் நிலையை தான் அதிகமாக காண முடிகிறது

இன்னும் பலர் இரவு தொழுகையின் இறுதி தொழுகை வரும் வரை தாமதித்து அதன் பிறகு விடுபட்ட தொழுகையை அவசர அவசரமாக தனியாக தொழுது விட்டு ஹாபிள் தொழ வைக்கும் இறுதி இரு ரக்அத்தில் பங்கு பெறும் சூழ்நிலையை தான்  காண முடிகிறது

இதற்கான காரணம் என்ன ?

ஹாபிள்கள் நீண்ட நேரம் தொழுகையில்  ஓதுவது அவர்களுக்கு சிரமத்தை தருவதாக கருதுகின்றனர்

சடங்கிற்காக வழிபாடுகளை செய்யாது மறுமை வெற்றிக்காக மனமுவந்து செயல்படுவதே சிறப்பு

எட்டு ரக்அத் தொழு வைக்கும் ஹாபிளும்  ஒரு மணி நேரத்தில் தொழுகையை நிறைவேற்றி விடுகிறார்
இருபது ரக்அத் தொழு வைக்கும் ஹாபிளும்  ஒரு மணி நேரத்தில் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றி விடுகின்றார்

இருபத்தி ஏழாம் இரவிற்குள் முழு குர்ஆனையும் ஓதி முடித்து விட வேண்டும் என்ற மனநிலை தான் ஹாபிள்களுக்கும் உள்ளது

சிறு சூராக்கள் ஓதப்பட்டாலும் நிறுத்தி நிதானமாக தொழ வைக்கப்பட வேண்டும் என்பது தான் நபிவழியாகும்

اِنَّ الْمُنٰفِقِيْنَ يُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُهُمْ‌  وَاِذَا قَامُوْۤا اِلَى الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰى ۙ يُرَآءُوْنَ النَّاسَ وَلَا يَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِيْلًا ۙ‏

நிச்சயமாக (நிராகரிக்கும்) இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்(கக் கருது)கின்றனர்
எனினும் அல்லாஹ்வோ அவர்களை வஞ்சித்து விடுகின்றான்
அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு) கின்றார்கள் அவர்கள் வெகு சொற்பமாகவன்றி அல்லாஹ்வை தியானிப்பதில்லை

         (அல்குர்ஆன் : 4:142)

        நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்