ரமலானும் குர்ஆனும்
ரமலான் மாதத்தில்
நன்மைகளை குவிக்க ஆசையா
J . YASEEN IMTHADHI
*************
15-04-2021
*****
ரமலான் மாதம் தினமும் 222 வசனங்களை பார்த்து ஓதினாலே ரமலான் மாதம் நிறைவடையும் போது முழு குர்ஆனையும் ஒரு முறை ஓதி முடித்து விட முடியும்
மார்க்க உரைகளை தினமும் இரண்டு மணி நேரம் கேட்க நேரத்தை ஒதுக்குவதற்கு பதில் குர்ஆனின் 222 வசனங்களை நிறுத்தி நிதானமாக ஓதி முடிக்க இயலும்
திருக்குர்ஆனின் ஒரு எழுத்துக்கு பத்து நன்மை என்பது நபிமொழி
ரமலான் அல்லாத நாட்களில் ஒரு எழுத்துக்கு பத்து நன்மை என்றால் இறைவன் நன்மைகளை வாரி வழங்க தயாராக இருக்கும் ரமலான் மாதத்தில் திருக்குர்ஆனை படிக்கும் பொழுது ஒரு எழுத்திற்கு பல மடங்கு நன்மை என்பது தான் எதார்த்தம்
ரமலான் மாதத்தில் நன்மைகளை குவிக்க விரும்புவோர்
எதன் காரணத்தால் ரமலான் மாதத்தை இறைவன் சிறப்பித்து வைத்துள்ளானோ அந்த திருமறை குர்ஆனுடன் தொடர்புகளை அதிகபடுத்தி கொள்வது தான் மறுமை வெற்றிக்கு ஆசைபடும் மக்களின் செயலாக இருக்கும்
وَمَا تَكُوْنُ فِىْ شَاْنٍ وَّمَا تَتْلُوْا مِنْهُ مِنْ قُرْاٰنٍ وَّلَا تَعْمَلُوْنَ مِنْ عَمَلٍ اِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُوْدًا اِذْ تُفِيْضُوْنَ فِيْهِ وَمَا يَعْزُبُ عَنْ رَّبِّكَ مِنْ مِّثْقَالِ ذَرَّةٍ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَآءِ وَلَاۤ اَصْغَرَ مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْبَرَ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ
நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும் நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும் நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை பூமியிலோ வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைந்து விடுவதில்லை
இதை விடச் சிறியதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை
(அல்குர்ஆன் : 10:61)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment