Posts

Showing posts from March, 2021

ரமலான் ஷாஃபான்

   ரமலான் மாதத்தை வரவேற்கும்             முன் இதை நினைவு                      கொள்வீர்                      #-#-#-#-#-#           J . YASEEN IMTHADHI                     *************                      28-03-2021 சங்கைமிகுந்த ரமலான் மாதத்தை முந்திவரும் ஷாஃபான் மாதம் பிறை 15 நோன்பு சம்மந்தமாக இடம் பெறும் ஹதீஸ்களும் ஷாஃபான் பிறை 15 பிறகு எவ்வித நோன்புகளையும் கடை  பிடிக்க வேண்டாம் என்று இடம் பெறும் ஹதீசும் ஹதீஸ் கலை வல்லுனர்களால்  பலவீனமாக்கப்பட்ட ஹதீஸ்கள் என்பதை நினைவில் வைக்க  வேண்டும் அப்படியானால் ஷாஃபான் மாதத்திற்கு என்று தனித்துவம் இல்லையா என்றால் நிச்சயம்  முக்கியதுவம் உண்டு நபி ( ஸல்) அவர்கள் அதிகமாக நோன்புகளை கடைபிடித்த  மாதம் ஷாஃபான் மாதம் மட்டுமே கடமையாக்கப்பட்ட ரமலான் மாதத்தில் நோன்புகளை கடை பிடித்ததை போலவே ஷஃபான் மாதம் முழுவதும் நபி  (ஸல்) அவர்கள் சுன்னத்தான நோன்புகளை தொடர்ந்து கடை பிடித்துள்ளார்கள் சுருக்கமாக சொல்வதானால்  ரமலான் மாதம் தொடங்குவதற்கு இரு நாட்களுக்கு  முன்பாக குறைந்த பட்சம்  ஏதாவது ஒரு நாளில் நோன்பை கடை பிடிப்பது வலியுருத்தப்பட்ட நபி வழியாக உள்ளத

வேலூர் காவியானின் தத்துப்பிள்ளைகள்

             2021 அரசியல்களம்                            ********          வேலூர் காவியானின்              தத்துப்பிள்ளைகள்                      *****************                      21 :03:2021            J . YASEEN IMTHADHI                            ******** சமீபத்தில் பீஜேபி அரசால் கொண்டு வரப்பட்ட CAA NPR NRC சட்டத்தை எதிர்த்து ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்கள் செய்த போராட்டம் பொதுக்கூட்டம் அதற்கான பல்லாயிர கோடி  செலவுகள் மனஉளைச்சல்களை மறந்து BJB  ADMK மற்றும் அதன் கூட்டணிகளுக்கு ஓட்டு போட நினைப்பவர் அதோடு கூட்டு வைக்கும் கட்சிகளை விட முஸ்லிம் சமுதாயத்திற்கு துரோகம் இழைக்கும் நபர்கள் எவரும் இருக்க முடியாது நான் பாசிச சட்டத்தை கடுமையாக எதிர்ப்பவன் என்று கூறி கொண்டு பாசிச வெற்றிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு தரும்  எவரும் முஸ்லிம் சமுதாயத்தில் சுயநலவாதிகளே என்ற ஆழமான சிந்தனையே நம் சமுதாயத்தை நிச்சயம் தற்போதைய ஆபத்தில் இருந்து விடுவிக்கும் மண்ணை வாரி தலையில் போட்டு கொண்டு அந்த மண்ணை சுத்தம் செய்ய மீண்டும்  சமுதாயத்தை தனது அறிவீன பாதை பக்கம் அழைப்பவன் நம்மை கோமாளியாகவே

அரசியல்வாதிகளின் இலவசங்கள்

         அரசியல்வாதிகளின் இலவசங்களும் வாக்குறுதிகளும்                         *****************                      20 :03:2021            J . YASEEN IMTHADHI                            ******** கைவசம் இருப்பதை ஒருவன் தானம் செய்தால் அதற்கு பெயர் பொதுசேவை பொதுசேவை செய்வதற்காக கைவசம் இருப்பதை எல்லாம் பதவியை பெற செலவு செய்தாலும் சரி அல்லது அப்பதவியை பெறுவதற்காக பல இலவசங்களை முன்னறிவிப்பு செய்தாலும் சரி அதற்கு பெயர் பொதுசேவை அல்ல மாறாக பதவியை பெறுவதற்காக தரப்படும் லஞ்சங்களே ஆகும் காரணம் இலவசம் என்பது தேவையுடைய மக்களை கருத்தில் கொண்டு ஆட்சியில் இருக்கும்  நேரம் பதவிகளை அனுபவிப்போர் செய்ய வேண்டிய கடமை தானே தவிர அது தான தர்மம் அல்ல அறிவிக்கப்படும் அனைத்து இலவசங்களுக்கும் அவர்கள் பயன்படுத்துவது நாட்டு மக்களின் கோடிக்கணக்கான  வரிப்பணம் தானே தவிர அரசியல்வாதிகளின் சொந்த பணம் அல்ல இந்த இலவசங்கள் யாவும் வேறு வகையில் மீண்டும் நாட்டு  மக்கள் மீதே வரியாக திணிக்கப்படும் ஒரு வகையில் இதுவும் அரசியல் கட்சிகள் தங்கள்  வருமானத்தை ஈட்டிக்கொள்ள செய்யும்  முதலீடாகும் அதிகபட்சமாக ஆட்சியில் இருப்

தனிமை இறையச்சம் துஆ

     மனனம் செய்ய வேண்டிய           தனிமை இறையச்சம்                    பிராத்தணை                   *****************                      14 :03:2021            J . YASEEN IMTHADHI                            ******** ஒரு மனிதன் எந்தளவுக்கு சமூகத்தை விட்டும் நெருங்கிய வட்டங்களை விட்டும்  விலகி செல்கிறானோ அந்தளவிற்கு அவனிடம் பாவங்கள் குடியேறும்  வாய்ப்புகள் மிகவும் அதிகம் ஆணும் பெண்ணும் இதில் சமமானவர்களே குறிப்பாக  தனிமை என்ற நிலையை அடைந்து விட்டால் அந்த தனிமையே மனிதனை அதிகமாக வழி கெடுக்கும் சூழலாக மாறி விடும் உள்ளூரில் நல்லோர்களாக தங்களை காட்டி கொள்ளும் பலர் வெளியூரில் கட்டுப்பாடுகளை மீறி நடப்பதும் உறவுகளோடு அண்டி இருக்கும் போது நல்லோர்களாக காட்டி கொள்ளும் பலர் அறிமுகம் இல்லாத நபர்களோடு இருக்கும் போது வரம்பு மீறி நடப்பதும் யாரும் அறிய முடியாத இடத்தில் தனிமையில் இருக்கும் போது தீமையான காரியங்களை நோக்கி சிந்தனையை செலுத்துவதும் இதன் வெளிப்பாடு தான் இதை மையமாக வைத்து தான் இஸ்லாம் தனிமை இறையச்சம் எனும் உணர்வை அதிகமாக வலியுருத்துகிறது நபி (ஸல்) அவர்கள் இறைனிடம் செய்த பிராத்தணைகளி

நீங்கள் ஆன்ட்ராய்ட் அடிமையா

   நீங்கள் ஆன்ட்ராய்ட் அடிமையா                     *****************            J . YASEEN IMTHADHI                            ******** மன உளைச்சல் குடும்ப விரிசல் தொழில் கவனமின்மை கற்பனை எண்ணங்கள் வீண் விவாதங்கள் பூசல்கள் படிப்பில் பின்னடைவு தூக்கம் கெடுதல் கடமைகளை புறக்கணித்தல் இளம் பெண்கள் தடம் புரளுதல் இளைஞர்கள் எதிர் காலத்தை  சிந்திக்க மறுத்தல் அர்ப்பமான வருமானத்தை இழக்குதல் போன்ற பல நோய்களுக்கும் விளைவுகளுக்கும் தற்காலத்தில் தேவையானது மருத்துவமோ டானிக்குகளோ ஆலோசனை கூறும் டாக்டர்களோ   அல்ல மாறாக ஒரு மனிதன் கைவசத்தில் வைத்திருக்கும் ஆன்ட்ராய்ட் மொபைல்களே இவைகளுக்கு மூல காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி கையில் வைத்திருக்கும் ஆன்ட்ராய்ட்  மொபைல் தவறும் போது மரண இழப்பை போல் வருந்தும் நிலை உங்களுக்கு ஏற்படுகிறதா   ? கைவசம் வைத்திருக்கும் மொபைல் உள்ளடக்கத்தை பிறர்கள் பார்ப்பதை நீங்கள் அஞ்சுகிறீர்களா  ? தனிமையில் அதிக நேரம் பேசும் பழக்கத்திற்கு நீங்கள் உங்களை தயார் படுத்தி கொண்டீர்களா ? குடும்பத்தார் அறியாத வண்ணம் உங்கள் தொடர்பில் உள்ள எண்களின் பெயர்களை போலியான பெ

வெற்றுக்கூப்பாடு

     வெற்றுக்கூப்பாடு போடும்                   முஸ்லிம்கள்                       ***********             கட்டுரை எண் 1404              J . Yaseen imthadhi      Bismillahir Rahmanir Raheem                            ***** பிற சமூகத்தில் ஒற்றுமை நிரம்பி வழிந்து ஓடுவதை போலவும் முஸ்லிம் சமூகம் மட்டும் தான் பல பிரிவுகளாக செயல்படுவதை போலவும் அடிக்கடி பலர்கள் அறிக்கை போடுவதையும் அதை வைத்த சமூகத்தை இழிவு படுத்துவதையும்  காண முடிகிறது இவர்கள் உலகத்தில் தான் வாழ்கிறார்களா ? அல்லது தேவலோகத்தில் வாழ்கிறார்களா ? என்று சந்தேகம் எழுகிறது மார்க்க ரீதியிலும் முஸ்லிம் சமுதாயம் ஒரே அணியில் திரளுவார்கள் என்ற உத்திரவாதமும் இல்லை உலகியல் ரீதியாகவும் அது சாத்தியமும் இல்லை தனி இயக்கம் கழகம் என்று உருவாக்கப்படுவதே சமூக அமைப்பில் தனித்து நிற்பதற்கு தான் என்ற சாதாரண புரிதலும்  கூட அற்றவர்களாக உள்ளனர் பிற சமூகத்திலும் இவர்கள்  கருதுவது போல் சூழ்நிலை இல்லை என்பதே உண்மை இவர்கள் கூற்று பிரகாரம்  ஒரே அணியில் திரள முடியும் என்றால் அந்த ஒரே அணியை எந்த அடிப்படையில் உருவாக்குவது ? பல நுற்றாண்டுகளாக அந்த ஒரு