ரமலான் ஷாஃபான்

   ரமலான் மாதத்தை வரவேற்கும்
            முன் இதை நினைவு
                     கொள்வீர்

                     #-#-#-#-#-#
          J . YASEEN IMTHADHI
                    *************
                     28-03-2021

சங்கைமிகுந்த ரமலான் மாதத்தை முந்திவரும் ஷாஃபான் மாதம் பிறை 15 நோன்பு சம்மந்தமாக இடம் பெறும் ஹதீஸ்களும்

ஷாஃபான் பிறை 15 பிறகு எவ்வித நோன்புகளையும் கடை  பிடிக்க வேண்டாம் என்று இடம் பெறும் ஹதீசும்
ஹதீஸ் கலை வல்லுனர்களால்  பலவீனமாக்கப்பட்ட ஹதீஸ்கள் என்பதை நினைவில் வைக்க  வேண்டும்

அப்படியானால் ஷாஃபான் மாதத்திற்கு என்று தனித்துவம் இல்லையா என்றால் நிச்சயம்  முக்கியதுவம் உண்டு

நபி ( ஸல்) அவர்கள் அதிகமாக நோன்புகளை கடைபிடித்த  மாதம் ஷாஃபான் மாதம் மட்டுமே

கடமையாக்கப்பட்ட ரமலான் மாதத்தில் நோன்புகளை கடை பிடித்ததை போலவே ஷஃபான் மாதம் முழுவதும் நபி  (ஸல்) அவர்கள் சுன்னத்தான நோன்புகளை தொடர்ந்து கடை பிடித்துள்ளார்கள்

சுருக்கமாக சொல்வதானால்  ரமலான் மாதம் தொடங்குவதற்கு இரு நாட்களுக்கு  முன்பாக குறைந்த பட்சம்  ஏதாவது ஒரு நாளில் நோன்பை கடை பிடிப்பது வலியுருத்தப்பட்ட நபி வழியாக உள்ளது

வருடம் முழுவதும் நோன்புகளை கடை பிடிக்காது ரமலானின் முதல் நோன்பை கடை பிடிக்கும் போது உடல் சோர்வுகளை எதிர் கொள்ள ஷாஃபான் மாத நோன்புகள் உறுதுணையாக உள்ளது

عن أبي سلمة ، أن عائشة رضي الله عنها ، حدثته قالت : لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان ، فإنه كان يصوم شعبان كله

ஷாபான் மாதத்தில்தான் நபி (ஸல்) அவர்கள் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள்

ஷாஃபான் மாதம் முழுவதும் நோன்பை நோற்றுள்ளார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி ) அவர்கள் சொன்னதாக அபீ சலமா ( ரலி) அவர்கள் அறிவித்தார்கள் 

     அஹ்மத் 26022
     அபூதாவுத் 2336
      நஸாயீ  2175
     இப்னு மாஜா 1648

        நட்புடன்  J .  இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்