வேலூர் காவியானின் தத்துப்பிள்ளைகள்
2021 அரசியல்களம்
********
வேலூர் காவியானின்
தத்துப்பிள்ளைகள்
*****************
21 :03:2021
J . YASEEN IMTHADHI
********
சமீபத்தில் பீஜேபி அரசால் கொண்டு வரப்பட்ட CAA NPR NRC சட்டத்தை எதிர்த்து ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்கள் செய்த போராட்டம் பொதுக்கூட்டம் அதற்கான பல்லாயிர கோடி செலவுகள் மனஉளைச்சல்களை மறந்து BJB ADMK மற்றும் அதன் கூட்டணிகளுக்கு ஓட்டு போட நினைப்பவர் அதோடு கூட்டு வைக்கும் கட்சிகளை விட முஸ்லிம் சமுதாயத்திற்கு துரோகம் இழைக்கும் நபர்கள் எவரும் இருக்க முடியாது
நான் பாசிச சட்டத்தை கடுமையாக எதிர்ப்பவன் என்று கூறி கொண்டு பாசிச வெற்றிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு தரும் எவரும் முஸ்லிம் சமுதாயத்தில் சுயநலவாதிகளே
என்ற ஆழமான சிந்தனையே நம் சமுதாயத்தை நிச்சயம் தற்போதைய ஆபத்தில் இருந்து விடுவிக்கும்
மண்ணை வாரி தலையில் போட்டு கொண்டு அந்த மண்ணை சுத்தம் செய்ய மீண்டும் சமுதாயத்தை தனது அறிவீன பாதை பக்கம் அழைப்பவன் நம்மை கோமாளியாகவே கருதுகிறான்
அது ஆலீமானாலும் சரி
அறிவாளியானாலும் சரி
மக்கள் சேவைகளுக்கு தன்னை முன்னிலை படுத்துபவர்கள் என்று பீற்றிக்கொள்பவர்களாலும் சரி
சமுதாயம் என்பது இவர்களின் ஏணிப்படிகள் அல்ல
இவர்களை மூலமாக வைத்து சமூகம் முன்னேறி செல்ல வேண்டிய துணைகால்களே
அநீதத்தை எதிர்த்து இவர்கள் நிற்கும் பாதையில் இருந்து நம் துணை கால்களை அகற்றினாலே போதுமானது
அறிவீனத்தின் பாதிப்பை அப்போது இவர்களே மிக விரைவில் உணருவார்கள் இன்ஷா அல்லாஹ்
இது மாற்று கட்சி சிறந்தது என்பதை விளக்கும் பதிவு அல்ல மாறாக மாற்றம் ஏற்பட இவர்கள் தேர்வு செய்துள்ள வழி ஆபத்து என்பதை உணர்த்தும் பதிவே
வேலூர் காவியானை ( இப்ராஹீமை) வீரியமாக எதிர்ப்பதற்கு இவர்களுக்கு கடுகளவும் அருகதை இல்லை
காரணம் பாசிசத்தை ஆதரிப்பதில் வேலூர் காவியான் தெளிவாக தன்னை மக்கள் மன்றத்தில் அடையாளப்படுத்தி கொண்டான்
அதே பாசிசத்தை ஆதரிப்பதற்கு தங்களது பதவி மற்றும் தற்காப்பு மோகத்தை இவர்கள் போர்வையாக மாட்டி கொண்டார்கள்
சுருங்க சொன்னால் பாசித்தை நேரடியாக கக்கும் அல்லது பாசிச வெற்றிக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக மாற இருக்கும் இவர்கள் வேலூர் காவியானின் தத்துப்பிள்ளைகளே
முஸ்லிம்களை பொருத்தவரை உலகில் பெற வேண்டிய வெற்றியும் தோல்வியும் லட்சியத்தை மட்டுமே நோக்கி அமைய வேண்டும்
வெற்றிக்காக சந்தர்ப்பவாதியாக சுயநலவாதியாக மாறுவது தான் இஸ்லாம் கடுமையாக கண்டிக்கும் துர்குணம்
تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَ عُلُوًّا فِى الْاَرْضِ وَلَا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ
அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம் ஏனெனில் பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு
(அல்குர்ஆன் : 28:83)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment