அரசியல்வாதிகளின் இலவசங்கள்
அரசியல்வாதிகளின்
இலவசங்களும் வாக்குறுதிகளும்
*****************
20 :03:2021
J . YASEEN IMTHADHI
********
கைவசம் இருப்பதை ஒருவன் தானம் செய்தால் அதற்கு பெயர் பொதுசேவை
பொதுசேவை செய்வதற்காக கைவசம் இருப்பதை எல்லாம் பதவியை பெற செலவு செய்தாலும் சரி
அல்லது அப்பதவியை பெறுவதற்காக பல இலவசங்களை முன்னறிவிப்பு செய்தாலும் சரி அதற்கு பெயர் பொதுசேவை அல்ல
மாறாக பதவியை பெறுவதற்காக தரப்படும் லஞ்சங்களே ஆகும்
காரணம் இலவசம் என்பது தேவையுடைய மக்களை கருத்தில் கொண்டு ஆட்சியில் இருக்கும் நேரம் பதவிகளை அனுபவிப்போர் செய்ய வேண்டிய கடமை தானே தவிர அது தான தர்மம் அல்ல
அறிவிக்கப்படும் அனைத்து இலவசங்களுக்கும் அவர்கள் பயன்படுத்துவது நாட்டு மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணம் தானே தவிர அரசியல்வாதிகளின் சொந்த பணம் அல்ல
இந்த இலவசங்கள் யாவும் வேறு வகையில் மீண்டும் நாட்டு மக்கள் மீதே வரியாக திணிக்கப்படும்
ஒரு வகையில் இதுவும் அரசியல் கட்சிகள் தங்கள் வருமானத்தை ஈட்டிக்கொள்ள செய்யும் முதலீடாகும்
அதிகபட்சமாக ஆட்சியில் இருப்போர் வாக்குறுதி கொடுப்பதாக இருந்தால் தற்போது எந்த சட்டங்களால் நாட்டு மக்கள் அன்றாடம் அவதிப்படுகிறார்களோ அந்த சட்டங்களை தள்ளுபடி செய்வது தான்
ஆட்சியில் அமர துடிப்போர் எது போன்ற சட்டங்கள் நாட்டு மக்களுக்கு தொல்லை தருவதாக கருதுகிறார்களோ அதை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்வோம் என்ற உத்தரவாதம் வழங்குவது தான்
இந்த சாதாரண புரிதலும் கூட இல்லாமல் இலவசங்களை பரவசங்களாக கருதி கொண்டு ஆனந்தம் அடைவது நாட்டு மக்கள் தங்களுக்கு தாங்களே ஏற்படுத்தி கொள்ளும் அவமானம்
எந்த கட்சியை மக்களுக்கான கட்சியாக கருதுகிறார்களோ அந்த கட்சிகளுக்கு குரல் கொடுப்பதை தாண்டி தனது நேரத்தையும் உழைப்பையும செலவு செய்து கொண்டிருந்தால் இவர்களை விட ஏமாளிகள் எவரும் இல்லை
வறுமையும் சோதனைகளும் சீரிய சிந்தனையை ஏற்படுத்த வேண்டுமே தவிர மீண்டும் நம்மை புதைகுழியில் தள்ளும் சக்கரமாக பயன்பட்டு விட கூடாது
நட்புடன் குடிமகன்
J . இம்தாதி
Comments
Post a Comment