வெற்றுக்கூப்பாடு
வெற்றுக்கூப்பாடு போடும்
முஸ்லிம்கள்
***********
கட்டுரை எண் 1404
J . Yaseen imthadhi
Bismillahir Rahmanir Raheem
*****
பிற சமூகத்தில் ஒற்றுமை நிரம்பி வழிந்து ஓடுவதை போலவும் முஸ்லிம் சமூகம் மட்டும் தான் பல பிரிவுகளாக செயல்படுவதை போலவும் அடிக்கடி பலர்கள் அறிக்கை போடுவதையும் அதை வைத்த சமூகத்தை இழிவு படுத்துவதையும் காண முடிகிறது
இவர்கள் உலகத்தில் தான் வாழ்கிறார்களா ? அல்லது தேவலோகத்தில் வாழ்கிறார்களா ? என்று சந்தேகம் எழுகிறது
மார்க்க ரீதியிலும் முஸ்லிம் சமுதாயம் ஒரே அணியில் திரளுவார்கள் என்ற உத்திரவாதமும் இல்லை
உலகியல் ரீதியாகவும் அது சாத்தியமும் இல்லை
தனி இயக்கம் கழகம் என்று உருவாக்கப்படுவதே சமூக அமைப்பில் தனித்து நிற்பதற்கு தான் என்ற சாதாரண புரிதலும் கூட அற்றவர்களாக உள்ளனர்
பிற சமூகத்திலும் இவர்கள் கருதுவது போல் சூழ்நிலை இல்லை என்பதே உண்மை
இவர்கள் கூற்று பிரகாரம் ஒரே அணியில் திரள முடியும் என்றால் அந்த ஒரே அணியை எந்த அடிப்படையில் உருவாக்குவது ?
பல நுற்றாண்டுகளாக அந்த ஒரு அணி உருவாகாது இருப்பதற்கு காரணம் என்ன ?
அந்த அணியின் தலைவர் ஒட்டு மொத்த சமூகத்தின் அங்கீகாரத்தை பெற்றவராக இருப்பது சாத்தியமா ? என்று சிந்திப்பது இல்லை
அல்லது இந்த கூப்பாடை தூக்கி சுற்றுவோர் அது போன்ற ஓர் அமைப்பில் அங்கம் வகிப்பவர்கள் தானா ?
என்றெல்லாம் சிந்தித்தால் இவர்கள் ஜோக்கர்களாக மட்டும் தென்படுவார்கள்
தனக்கு எது சிறந்தது என்று தெரிகிறதோ அந்த வழியை நடைமுறைபடுத்துவோருடன் இயன்றளவு கைகோர்த்து செல்வது தான் சரியே தவிர
ஒரே அணியில் திரளுவோம் ஒரே தலைமையில் செயல்படுவோம் என்பதெல்லாம் இவர்கள் போடும் வெற்று கூப்பாடு மட்டுமே
இது போன்றோர் சமூகத்திற்கு ஏதோ ஒரு வகையில் நன்மை செய்ய நினைத்தால் அவர்கள் அமைதியாக இருப்பதும் தேவையற்ற விமர்சனங்களில் தன்னை ஈடுபடுத்தாது இருப்பதும் தான் சிறப்பு
இதை தவிர்த்து விட்டு
எட்டா கனிக்கு ஆசைபட்டு கொண்டிருந்தால் எட்டும் கனிகளையும் தவற விடும் வாய்ப்புகள் தான் அமையும்
விமர்சித்து கொண்டே வாழ்நாளை கழிப்பது அறிவார்த்தம் அல்ல
மாறாக எதை விமர்சிக்கிறோமோ அதற்கு மாற்று வழியை சாத்தியமான வழியை கூறுவதும் அதை நோக்கி அழைப்பதும் தான் அறிவார்த்தம்
மார்க்கத்தை முறையாக ஆய்வு செய்யாத சில தாயீக்களும் இது போல் கருத்தை உணர்ச்சி வசமாக பேசி திரிவதையும் காண முடிகிறது
وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَهُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰـكِنْ يُّدْخِلُ مَنْ يَّشَآءُ فِىْ رَحْمَتِهٖ وَالظّٰلِمُوْنَ مَا لَهُمْ مِّنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ
அல்லாஹ் நாடியிருந்தால், நிச்சயமாக அவர்கள் (யாவரையும்) அவன் ஒரே உம்மத்தாக ( சமுதாயமாக ஆக்கியிருப்பான்
எனினும் அவன் தான் நாடியவர்களைத் தன்னுடைய ரஹ்மத்தில் (கிருபையில் ) நுழைவிப்பான்
அநியாயக்காரர்களுக்குப் பாதுகாவலர்களோ, உதவிபுரிபவர்களோ இல்லை
(அல்குர்ஆன் : 42:8)
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment