நீங்கள் ஆன்ட்ராய்ட் அடிமையா

   நீங்கள் ஆன்ட்ராய்ட் அடிமையா
                    *****************
           J . YASEEN IMTHADHI
                           ********
மன உளைச்சல்
குடும்ப விரிசல்
தொழில் கவனமின்மை
கற்பனை எண்ணங்கள்
வீண் விவாதங்கள்
பூசல்கள்
படிப்பில் பின்னடைவு
தூக்கம் கெடுதல்
கடமைகளை புறக்கணித்தல்
இளம் பெண்கள் தடம் புரளுதல்
இளைஞர்கள் எதிர் காலத்தை  சிந்திக்க மறுத்தல்
அர்ப்பமான வருமானத்தை இழக்குதல்

போன்ற பல நோய்களுக்கும் விளைவுகளுக்கும்
தற்காலத்தில் தேவையானது
மருத்துவமோ டானிக்குகளோ ஆலோசனை கூறும் டாக்டர்களோ   அல்ல

மாறாக ஒரு மனிதன் கைவசத்தில் வைத்திருக்கும் ஆன்ட்ராய்ட் மொபைல்களே இவைகளுக்கு மூல காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி

கையில் வைத்திருக்கும் ஆன்ட்ராய்ட்  மொபைல் தவறும் போது மரண இழப்பை போல் வருந்தும் நிலை உங்களுக்கு ஏற்படுகிறதா   ?

கைவசம் வைத்திருக்கும் மொபைல் உள்ளடக்கத்தை பிறர்கள் பார்ப்பதை நீங்கள் அஞ்சுகிறீர்களா  ?

தனிமையில் அதிக நேரம் பேசும் பழக்கத்திற்கு நீங்கள் உங்களை தயார் படுத்தி கொண்டீர்களா ?

குடும்பத்தார் அறியாத வண்ணம் உங்கள் தொடர்பில் உள்ள எண்களின் பெயர்களை போலியான பெயர்களை கொண்டு பதிவு செய்து வைத்துள்ளீர்களா ?

உறங்கும் போதும் கண் விழிக்கும் போதும் உங்கள் மொபைல் முன்னோக்கியே உங்கள்  சிந்தனையும் கண் பார்வையும் செல்கிறதா ?

நிச்சயம் நீங்கள் உங்களை அறியாமலேயே ஆன்ட்ராய்ட் மொபைலுக்கு அடிமையாகி விட்டீர்கள் என்பது தான் எதார்த்தமான பொருள்

இந்நிலை மாற உங்கள் கைவசம் உள்ள ஆன்ட்ராய்ட் மொபைலை சாதா மொபைலாக மாற்றுங்கள்

இதனால் உங்கள் கரம் மொபைலை விட்டு அதிக நேரம்  விலகியே இருக்கும்

தேவையற்ற எந்த நோடிபிகேஷனும் உங்களை வந்தடையாது

உலகியல் சிந்தனையில் உறவுகளின் நெருக்கத்தில் அதிக நேரம் உங்களை நீங்கள் தயார் படுத்தி கொள்வீர்கள்

இந்த சாதாரண உண்மையை உள்வாங்காது தன்னை மாற்றி கொள்ளாது வாழ்கை பாதை நிச்சயம் சீராகாது

உலக செய்திகளை காண செய்திதாள்களும் உண்டு
தொலைகாட்சியும் உண்டு

இவைகளுக்காக நாம்
நம் வாழியலை நாசமாக்கும் ஆன்ட்ராய்ட் மொபைல்  பாதையை சரி காண கூடாது

        நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்