தனிமை இறையச்சம் துஆ

     மனனம் செய்ய வேண்டிய
          தனிமை இறையச்சம்
                   பிராத்தணை

                  *****************
                     14 :03:2021
           J . YASEEN IMTHADHI
                           ********

ஒரு மனிதன் எந்தளவுக்கு சமூகத்தை விட்டும் நெருங்கிய வட்டங்களை விட்டும்  விலகி செல்கிறானோ அந்தளவிற்கு அவனிடம் பாவங்கள் குடியேறும்  வாய்ப்புகள் மிகவும் அதிகம்

ஆணும் பெண்ணும் இதில் சமமானவர்களே

குறிப்பாக  தனிமை என்ற நிலையை அடைந்து விட்டால் அந்த தனிமையே மனிதனை அதிகமாக வழி கெடுக்கும் சூழலாக மாறி விடும்

உள்ளூரில் நல்லோர்களாக தங்களை காட்டி கொள்ளும் பலர் வெளியூரில் கட்டுப்பாடுகளை மீறி நடப்பதும்

உறவுகளோடு அண்டி இருக்கும் போது நல்லோர்களாக காட்டி கொள்ளும் பலர் அறிமுகம் இல்லாத நபர்களோடு இருக்கும் போது வரம்பு மீறி நடப்பதும்

யாரும் அறிய முடியாத இடத்தில் தனிமையில் இருக்கும் போது தீமையான காரியங்களை நோக்கி சிந்தனையை செலுத்துவதும் இதன் வெளிப்பாடு தான்

இதை மையமாக வைத்து தான் இஸ்லாம் தனிமை இறையச்சம் எனும் உணர்வை அதிகமாக வலியுருத்துகிறது

நபி (ஸல்) அவர்கள் இறைனிடம் செய்த பிராத்தணைகளில் தனிமையில் இறையச்சம் என்பது மிகவும் முக்கியமானது

அனைவராலும் மனனம் செய்யப்பட வேண்டிய பிராத்தணைகளில் வலுவானது

சந்ததிகளை மனனம் செய்ய தூண்ட வேண்டிய துஆக்களில் முதன்மையானது

اللهمَّ إِنَّي أسألُكَ خشْيَتَكَ في الغيبِ والشهادَةِ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கஸ்யதக (F) பில் கை(ஃ)பி
வஸ்ஸஹாததி

பொருள் : இறைவா தனிமையிலும் வெளிப்படையிலும் இறையச்சத்தை உன்னிடம் நான் கேட்கிறேன் 

                            *******
அறிவிப்பாளர்
அம்மார் இப்னு யாசிர்

நூல் நஸாயீ  1305
          அஹ்மத் 18351

         நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்