புனித கஃபாவும் மத்ஹபும்
கஃபாவின் சிறப்பு தன்மையை நாசமாக்கிய மத்ஹபும் தெளிவும் *********** கட்டுரை எண் 1398 J . Yaseen imthadhi Bismillahir Rahmanir Raheem ***** இந்த பதிவுடன் இணைக்கப்பட்ட கஃபாவின் புகைப்படம் 300 வருடங்களுக்கு முன்பு உள்ள அமைப்பாகும் கஃபா எனும் புனிதப்பள்ளியை சுற்றி நான்கு கட்டிட அமைப்பை இந்த புகைப்படத்தில் நீங்கள் காண முடியும் இந்த நான்கு அமைப்புக்கும் தூய இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லை மாறாக தங்களது அடிமைத்தனத்தை உணர்ந்து ஒரே தலைமையின் கீழ் உலக மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை வெளிக்காட்ட ஒரே இமாமை பின்பற்றி தொழுகையை நிறைவேற்றும் அற்புதமான அதிசயமான இடம் தான் கஃபா எனும் புனித இடம் நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள் மற்றும் கலீபாக்களின் ஆட்சிக்கு பிறகு துருக்கியர்களின் ஆட்சியின் கீழும் பல வருடம் அரபு நாடு இருந்தது இந்த சூழலில் மார்க்கத்திற்கு முரணான பல வழிகேடுகளும் நபிவழிக்கு எதிரான பல அம்சங்களும் புனித கஃபாவிலும் நுழைக்கப்பட்டது நபிவழியில் ஜமாத் தொழுகையை நிறைவேற்றுவதை பு