ஜும்மா பயன் தந்ததா
உங்கள் ஜும்மா பயன்
தந்ததா
××××××××××××××××××××××××
15:01:2021
J . யாஸீன் இம்தாதி
*************
குறைந்த பட்சம் ஐந்து வருடம் ( 240 ) ஜும்மா நாட்களில் கலந்து கொண்ட பின்பும்
ஒரு முஸ்லிம் அதன் மூலம் தனது அர்ப்பமான தவறுகளை கூட தவிர்க்காத சூழலில் இருந்தால்
அவன் அதுவரை பங்கு கொண்ட ஐந்து வருட ஜும்மாக்களும் வெள்ளி உரைகளும் அவனை பொருத்தவரை வீண்
தனக்குள் மன மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமே இல்லாது எந்த நிகழ்வில் கலந்து கொண்டாலும் சரி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டாலும் சரி அதனால் எவ்வித பயனும் இல்லை
இறைவன் வழங்கும் நேர்வழி கூட
அந்த நேர்வழியை தேடி பயணிப்பவனுக்கு தான் கிடைக்குமே தவிர
அந்த நேர்வழி நிகழ்வுகளில் நேரம் கிடைக்கும் போது பங்கு பெறும் நபர்களுக்கு கிடைக்காது
எண்ணத்தின் அடிப்படையே மறுமை வெற்றிக்கு அறிகுறி
مَنْ كَانَ يُرِيْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِيْعًا اِلَيْهِ يَصْعَدُ الْـكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهٗ وَ الَّذِيْنَ يَمْكُرُوْنَ السَّيِّاٰتِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ وَمَكْرُ اُولٰٓٮِٕكَ هُوَ يَبُوْرُ
எவன் இஸ்லாத்தின் கண்ணியத்தை நாடுகிறானோ அவனது எல்லா கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும்
(என்பதை அறிந்து கொள்ளட்டும்) தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான் அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு
இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.
(அல்குர்ஆன் : 35:10)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment