ரஜினி ரசிகன்
ரஜினி ரசிகன்
××××××××××××××××××××××××
J . யாஸீன் இம்தாதி
*************
இப்பதிவு ரஜினி ரசிகனுக்காக
••••••••••••••••••••••
வீட்டில் ரசம் சமைப்பதாக இருந்தாலும் அதற்கான முன்னேற்பாடுகளை தாய்மார்கள் முற்கூட்டியே செய்து விடுவார்கள்
சட்டியை அடுப்பில் வைத்து விட்டு தக்காளியை நொறுக்குவது கடுகு சீரகத்தை தேடுவது என்று இருக்க மாட்டார்கள்
பல வருடங்களாக ரஜினி அரசியல் சாயத்தை தன் மேல் பூசிக்கொண்டு திரிந்தாலும் 2017ஆண்டு தான் அரசியலில் நுழைவதாக அறிவித்தார்
அதன் பின் அரசியல் கட்சியை உருவாக்குவதற்கான எந்த முன்னேற்பாடுகளையும் தமிழக அளவில் நிறுவவில்லை
அதிகபட்சமாக தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பல காலம் காத்திருக்கும் ரசிகர்களை அழைத்து வைத்து கொண்டு அவர்களுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத தகவல்களை சினிமா பாணியில் உளரியது இவைகளை தவிர வேறு எதுவும் ரஜினி செய்தது இல்லை
அதாவது ரஜினி அரசியலில் நுழையும் எண்ணத்தில் அறவே இருந்தது இல்லை என்பதை அவரின் நடவடிக்கையே தெளிவாக காட்டி வந்தது
அவருக்கான அரசியல் வாய்ப்பு இருந்த காலத்திலும் கூட அதை சரியாக பயன்படுத்த தெரியாத நிலையில் தான் ரஜினி அரசியல் சூனியமாக இருந்தார்
இந்த சாதாரண புரிதலும் கூட இல்லாத நிலையில் தான் ரஜினியின் ரசிக பட்டாளமே இருந்துள்ளது
தற்போது ரஜினி அரசியல் முடிவை அறிவித்த பின்பு அவருடைய வீட்டு வாசலில் அரைவேக்காடுகளை போல் அமர்ந்து கோஷமிடுவது
அவரது கோழைத்தனமான முடிவுக்காக தனது குடும்பத்தையும் மறந்து தற்கொலை செய்து கொள்வது போன்ற மடமைத்தனத்தில் இருந்து இன்னும் ரஜினி ரசிகர்கள் மீளவில்லை
சினிமாவில் தனது தலைவன் ஹீரோ நிஜத்தில் மெய்யாலுமே ஜீரோ என்பதை தற்போது தான் ஒரு சிலர் அறிந்து வருகின்றனர்
தனது உயிரை தற்காத்து கொள்ள அரசியல் விலகலை தலைவன் அறிவித்தான்
தலைவன் வருகை நின்று போனதால் தனது உயிரை ஒரு மூட ரசிகன் மாய்த்து கொண்டான்
இதனால் அந்தரத்தில் தவிப்பது ரஜினி ரசிகனின் மனைவியும் அவனது பிள்ளையும் தானே தவிர அவனால் நேசிக்கப்பட்ட தலைவன் அல்ல
சினிமா மோகம் சிந்தனையை முடக்கும் என்பதற்கு ரஜினி ரசிகர்களே நிகழ்கால சான்று
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment