புனித கஃபாவும் மத்ஹபும்
கஃபாவின் சிறப்பு தன்மையை
நாசமாக்கிய மத்ஹபும்
தெளிவும்
***********
கட்டுரை எண் 1398
J . Yaseen imthadhi
Bismillahir Rahmanir Raheem
*****
இந்த பதிவுடன் இணைக்கப்பட்ட கஃபாவின் புகைப்படம் 300 வருடங்களுக்கு முன்பு உள்ள அமைப்பாகும்
கஃபா எனும் புனிதப்பள்ளியை சுற்றி நான்கு கட்டிட அமைப்பை இந்த புகைப்படத்தில் நீங்கள் காண முடியும்
இந்த நான்கு அமைப்புக்கும் தூய இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லை
மாறாக தங்களது அடிமைத்தனத்தை உணர்ந்து ஒரே தலைமையின் கீழ் உலக மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை வெளிக்காட்ட ஒரே இமாமை பின்பற்றி தொழுகையை நிறைவேற்றும் அற்புதமான அதிசயமான இடம் தான் கஃபா எனும் புனித இடம்
நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள் மற்றும் கலீபாக்களின் ஆட்சிக்கு பிறகு துருக்கியர்களின் ஆட்சியின் கீழும் பல வருடம் அரபு நாடு இருந்தது இந்த சூழலில் மார்க்கத்திற்கு முரணான பல வழிகேடுகளும் நபிவழிக்கு எதிரான பல அம்சங்களும் புனித கஃபாவிலும் நுழைக்கப்பட்டது
நபிவழியில் ஜமாத் தொழுகையை நிறைவேற்றுவதை புறக்கணித்து விட்டு மத்ஹப் வழியில் முஸ்லிம்கள் நான்கு விதங்களில் தொழுது வந்தனர்
அந்த வழிகேடுகளின் தாக்கம் புனித கஃபாவையும் விட்டு வைக்கவில்லை
ஒரு இமாமை பின்பற்றி தொழுகை நடத்தப்பட்ட கஃபாவில் நான்கு இமாம்கள் பெயராலும் நான்கு ஜமாத்துகளுக்கான இடம் (முசல்லாக்கள் )பிரிக்கப்பட்டது
புனித கஃபாவில் ஷாபி இமாமை பின்பற்றியும் ஒரு ஜமாத் தொழுகை நடைபெறும்
அதே சூழலில் ஹனபி மத்ஹப் பிரகாரமும் ஹன்பலி மத்ஹப் பிரகாரமும் மாலிக் மத்ஹப் பிரகாரமும் நான்கு இமாம்களை பின்பற்றி தொழ வைத்து கொண்டிருந்தனர்
சுருக்கமாக சொன்னால் புனித கஃபாவின் நோக்கத்தை மார்க்கத்தின் பெயரால் பல பித்அத்துகளை அரங்கேற்றம் செய்து துருக்கி ஆட்சியாளர்கள் நாசமாக்கினர்
இந்த சூழலில் தான் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்ற இஸ்லாமிய ஆய்வாளரின் பிரச்சாரப்பணி அரபுநாடுகளில் மின்னலாக பரவி கொண்டிருந்தது
அவரது இஸ்லாமிய பிரச்சாரத்தின் பயனாகத்தான் புனித கஃபாவில் மார்க்கத்தின் பெயரால் நுழைக்கப்பட்ட நான்கு முஸல்லாக்களும் அப்புறப்படுத்த பட்டு நபிவழியில் ஒரே இமாமின் தலைமையின் கீழ் மீண்டும் ஜமாத் தொழுகை கொண்டு வரப்பட்டது
இந்த அறிஞரை தான் வழிகேடர் என்றும் வஹ்ஹாபிகள் (குழப்பவாதிகள் ) என்றும் மார்க்க அறிஞர்களே ஆய்வுகளை செய்யாது அறிவீனமாக பேசி திரிகின்றனர்
இவர்கள் பார்வையில் புனித கஃபாவில் ஒரே நேரத்தில் நான்கு இமாம்களை முன்னிறுத்தி நான்கு வகைகளில் ஜமாத் தொழுகை நடத்தி முஸ்லிம்கள் புனித இடத்திலும் நான்கு கூறுகளாக தான் உள்ளனர் என்று தான் கூற வேண்டும்
அதை ஏற்க நீங்கள் தயாரா !!
என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்
யாரை விமர்சிப்பதாக இருந்தாலும் அவர்களின் உண்மை நிலையை அறிந்து விமர்சனம் செய்யுங்கள்
வெறுமனே செவிவழி செய்திகளை கேட்டு பாவமான விமர்சனங்களில் வீழ்ந்து விடாதீர்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment