Tntj ntf

                      TNTJ NTF
    அமைப்புகளுக்கு அறிவுரை

                     ***********
                    18:01:2021
             J . Yaseen imthadhi
     Bismillahir Rahmanir Raheem
                           *****
கொழுந்து விட்டு எறியும் நெருப்பை தூய்மையான தண்ணீரை கொண்டும் அணைக்க இயலும்

துர்நாற்றம் வீசும் கழிவு நீரை கொண்டும் ஆபத்தை ஏற்படுத்தும் நெருப்பை அணைக்க முடியும்

துர்நாற்றம் வீசும் கழிவு நீரும் பற்றி எறியும் நெருப்பை அணைக்க பயன்படுவதால் அந்த கழிவு நீரை யாரும் தேக்கி வைப்பதும் இல்லை விரும்புவதும் இல்லை

தற்போது சமூகவலைதளத்தில் TNTJ  NTF அமைப்பின் முக்கியஸ்தர்கள்  இந்த நிலையில் சிக்கி தவிப்பதாக தான் காண முடிகிறது

சத்தியத்தை சொல்கிறோம் எனும் பெயரில் இயக்க விவகாரங்களை தனிப்பட்ட நபர்களின் அந்தரங்க விவகாரங்களை வரம்பு மீறி பரிமாறி கொண்டிருப்பது கேவலமாக உள்ளது

இதனால் மறுமை வெற்றியை நாடி ஏகத்துவ கொள்கையை ஏற்று கொண்ட மக்களின் இதயங்கள் விரக்தியை நோக்கி தொடர்ந்து  பயணிக்கிறது

திருமறை குர்ஆனிலும்  நபியவர்களின் பொன்மொழிகளிலும் இது போன்ற வரம்பு மீறிய விமர்சனங்களுக்கு எந்த விதமான ஆதாரங்களும் இல்லை என்பதை உங்களுக்கு பொதுமக்கள் சொல்லும் அவல நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள்

காட்டி கொடுத்தது யார் ?
போட்டு கொடுத்தது யார் ?
என்று தொடர்ந்து சச்சரவுகளை செய்து  உங்களை அறியாமல் நீங்கள் தான் உங்கள்  விவகாரங்களை பிறருக்கும் துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் உணர்சிவசத்தால் வெளிப்படுத்தி கொண்டீர்கள்

உங்களுக்கு ஆதரவாக பேசுகிறோம் அல்லது  எதிராக பேசுகிறோம் எனும் பெயரில்  உங்களை சுற்றி தற்போது கொள்கை விரோதிகளும் காவிகளும் பல பெயர்களில் சமூகவலைதளங்களில் ஊடுருவி குளிர் காய்கின்றனர்

ஷைத்தான்களின் சூழ்ச்சியில் இருந்து ஒதுங்கி கொள்வது தான் அறிவார்த்தமும் மார்க்கத்தை கடை பிடிப்போரின் வழிமுறையுமே தவிர ஷைத்தான்களை வீழ்த்துவது என்பது எவராலும் இயலாத காரியம்

காரணம் உலகம் அழியும் வரை சாத்தான் இருப்பான் மனிதன் தான் இருக்க மாட்டான்  என்பதை உணருங்கள்

பயன் தராத விசயங்களுக்கு சமூகத்திற்கு உபயோகம் இல்லாத விசயங்களுக்கு  உலகில் தீர்வை தேடி சுற்றாதீர்கள் மறுமை விசாரணையை நம்பும் மக்களுக்கு  இது தேவையற்ற செயல்பாடாகும்

பல தரப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் அங்கம் வகிக்கும் பொதுதளத்தில் இருந்து கொண்டு தான் இது போல் விவகாரங்களை பேசுகிறீர்கள் பரப்புகிறீர்கள் என்பதை நிதானமாக யோசித்து செயல்படுங்கள்

இறுதியாக கொள்கை சகோதரர்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய அறிவுரை ஒன்று தான்

விசில் அடித்து கைதட்டி ரசிக்கும் கூட்டம் இருக்கும் வரை தான் ஒரு படம் நீண்ட நாள் ஓடும்

ரசிகர்கள் தனது ஆதரவை நிறுத்தி விட்டால் எந்த படமும் ஓடாது

சமூக பித்னாக்கள் தொடருவதும் மடிவதும் உங்கள் செயல்பாடில் தான் உள்ளது 


فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌۙ فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا  وَّلَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ بِمَا كَانُوْا يَكْذِبُوْنَ‏

அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு

وَاِذَا قِيْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِىْ الْاَرْضِۙ قَالُوْاۤ اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ‏
பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்

اَلَا ۤ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰـكِنْ لَّا يَشْعُرُوْنَ‏

நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை

    (அல்குர்ஆன் : 2:10,11,12)

          நட்புடன்  J .இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்