கொள்கைவாதிகளின் துர்நாற்றம்
கொள்கைவாதிகளின்
துர்நாற்றம்
***********
கட்டுரை எண் 1395
J . Yaseen imthadhi
Bismillahir Rahmanir Raheem
*****
கடந்த காலங்களில் ஏகத்துவ கொள்கைக்கு மாத்திரமே முக்கியதுவம் தந்து அதற்கான கூலியை மறுமையில் எதிர்பார்த்து செயல்பட வேண்டும் என்ற தெளிவான முடிவை எடுத்த நன்மக்கள் இன்றும் அதே நிலையில் எவ்வித பித்னாவிலும் தங்களை ஈடுபடுத்தி கொள்ளாது எவரையும் தூற்றாது போற்றாது இயக்கங்களை தூக்கி பிடிக்காது மறுமைக்கு சம்மந்தம் இல்லாத விமர்சனங்களில் விவாதங்களில் ஈடுபடாது அவர்களால் இயன்ற நற்காரியங்களை மாத்திரமே செய்து கொண்டு இன்றும் விளம்பரம் இல்லாது செயல்பட்டு வருகின்றனர்
இதே நோக்கத்திற்காக வருகை தந்த பலர் குர்ஆன் ஹதீசை ஒரு புறம் பேசி கொண்டு பிறர் குறைகளை ஆய்வு செய்து கொண்டு அதை பரப்பியும் விளக்கம் கூறியும் இயக்கங்களுக்கு ஆள் பிடித்து கொண்டும் பிற இயக்கங்களை வசை பாடி கொண்டு சினிமா நடிகர்களின் ரசிகர்களை விட அரசியல்வாதிகளின் தொண்டர்களை விட கேடு கெட்ட நிலையில் சமூகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி வருகின்றனர்
மறுமை விசாரணையே முழு திருப்தி தரும் என்பதை மறந்து உலகிலேயே இவர் குற்றவாளி அவர் நல்லவர் என்று வசைபாடி கொண்டுள்ளனர்
இதில் மார்க்கம் பேசும் சில இமாம்களும் அழைப்பு பணி செய்யும் தாயிக்களும் அங்கம் வகிப்பது அருவருக்கதக்கது
கொள்கைக்காக பல அர்ப்பணிப்புகளை செய்து வந்த மக்கள் தற்போது இவர்களால் நரகபடுகுழியை நோக்கி வேகமாக பயணிக்கின்றனர்
ஒரு புறம் இயக்க பித்தவாதிகளின் துர்நாற்றம்
மறு புறம் இயக்க எதிர்ப்புவாதிகளின் துர்நாற்றம்
மற்றொரு புறம் சந்தர்ப்பவாதிகளின் துர்நாற்றம்
எதிர்புறம் துரோகிகளின் துர்நாற்றம்
குரங்கு மரத்துக்கு மரம் தாவுவதை போல் இருக்கும் எல்லா இயக்கங்களிலும் மாறி மாறி பயணித்து இறுதியில் விரக்தியடைந்து மார்க்கத்தை விட்டே தடம் மாறி வழிகெட்டு துர்நாற்றத்தில் ஒதுங்கியது சில ஜென்மம்
சாத்தான் நேர்வழியில் செல்லும் மக்களை வீழ்த்துவதில் தான் வெற்றியடைவான் என்பதற்கே இவைகள் சான்று
இனியும் திருந்தாது வருந்தாது பயணித்தால் நிச்சயம் நரகமே மறுமை என்பதில் மாற்று கருத்துக்கு இடமேயில்லை
فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ حَتّٰى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوْا فِىْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا
உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்
(அல்குர்ஆன் : 4:65)
وَاِذَا ذُكِرَ اللّٰهُ وَحْدَهُ اشْمَاَزَّتْ قُلُوْبُ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَاِذَا ذُكِرَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖۤ اِذَا هُمْ يَسْتَبْشِرُوْنَ
மேலும் அல்லாஹ்(வின் பெயர்) மட்டும் தனித்தவனாகக் கூறப்பட்டால் மறுமையை ஈமான் கொள்ளாதவர்களின் இருதயங்கள் சுருங்கி விடுகின்றன
மேலும் அவனை அன்றி மற்றவர்(களின் பெயர்)கள் கூறப்பட்டால், உடனே அவர்கள் பெரிதும் மகிழ்வடைகிறார்கள்
(அல்குர்ஆன் : 39:45)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment