சீமானும் சுன்னத்ஜமாத்தும்

                 வஹ்ஹாபிசம்
    சீமானும் சுன்னத் ஜமாத்தும்

                       ***********
            கட்டுரை எண் 1397
             J . Yaseen imthadhi
     Bismillahir Rahmanir Raheem
                           *****

ஏகத்துவத்தை அழுத்தமாக எடுத்து சொல்லும் மக்களை முஸ்லிம்களில் ஒரு சாராரே வஹ்ஹாபிகள் என்று கடுமையாக விமர்சிக்கும் பொழுது

நாம் தமிழர் கட்சியின் தலைவர்  சீமான் வஹ்ஹாபிசத்தை சமூக ஊடுருவலுக்கு உவமை கூறி  விமர்சித்து பேட்டி கொடுத்திருப்பது  ஆச்சரியமான விசயம் அல்ல

நம்மை பொருத்தவரை சீமானின் பேட்டி  தாருமாறாக விமர்சிக்கப்பட வேண்டிய விசயம் அல்ல
மாறாக அவர் வஹ்ஹாபிசத்தை பற்றி  அறிந்த தகவல் தவறானது என்பதை அவருக்கே விளக்கி சொல்ல வேண்டிய விசயம் தான்

காரணம் இவ்விசயத்தை சீமான்  கற்பனை செய்து பேசியது அல்ல மாறாக முஸ்லிம்களில் ( சுன்னத் ஜமாத்தில் ஊறிப்போனவர்கள் )  வஹ்ஹாபிசத்தை பற்றி தவறாக எழுதி வைத்த செய்திகளை படித்திருப்பது  தான் காரணம்

இதில் நகைப்புக்குரிய விசயம் என்னவெனில் வஹ்ஹாபிசம் என்று குறிப்பிடுவதற்கும் ஏகத்துவத்திற்கும் கடுகளவும் தொடர்பு இல்லை

காரணம் வஹ்ஹாபி என்பவர் அரபுலகில்  ஏகத்துவத்தை பேசி புரட்சி செய்யவில்லை
மாறாக வஹ்ஹாபி என்பவரின் மகன் முஹம்மத் என்பவர் தான் ஏகத்துவத்தை அழுத்தமாக போதித்தவர்

மக்களுக்கு அரபு மொழி நடைமுறை புரியாததை மையமாக வைத்து சுன்னத் ஜமாத்தை சார்ந்த சிலர் இட்டுக்கட்டிய செய்தி தான் வஹ்ஹாபிசம் என்பது 

                   *************

  வஹ்ஹாபிசம் என்றால் என்ன ?
                     ÷÷÷÷÷÷÷÷

முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பது அரபு பெயர்

அதாவது அப்துல் வஹ்ஹாப் மகனார் முஹம்மத்

என்பது தான் இந்த வாசகத்தின் பொருள்

நபிகளார் காலத்திற்கு பிறகு இஸ்லாம் கண்டிக்கும் சமாதி வழிபாடும் தனிமனித வழிபாடும் மார்க்கத்தின் பெயரால் அரபுலகில் ஆங்காங்கே   தலை தூக்கியது

அதை எதிர்த்து அக்காலத்தில்  கடுமையாகவும் ஆதாரப்பூர்வமாகவும் சரியான ஏகத்துவ கொள்கையை மக்களுக்கு பிரச்சாரம் செய்தவர் தான் அப்துல் வஹ்ஹாப் என்பவரின் மகனார்  முஹம்மத் என்பவர்

ஏகத்துவ கொள்கையை கடுமையாக விமர்சிப்போர் அக்கொள்கையுடைய மக்களை விமர்சிப்பதாக இருந்தால்  முஹம்மதிசம் என்று தான் விமர்சித்து இருக்க வேண்டும்
காரணம் அப்துல் வஹ்ஹாபின் மகன் முஹம்மத் என்பவர் தான் இதோடு தொடர்புடையவர்
இதை அக்கால சுன்னத் ஜமாத் அறிஞர்களும் அறிந்தே வைத்திருந்தனர்

அவ்வாறு முஹம்மதிசம் என்று ஏகத்துவ கொள்கையை விமர்சித்தால் முஹம்மத் என்ற நபிகள் நாயகத்தின் வழியை தான் ஏகத்துவவாதிகள் போதிக்கிறார்கள் என்று புரிந்து ஏகத்துவவாதிகளுக்கு பின்னால் மக்கள் சென்று விடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக  தான்

ஏகத்துவத்தை போதிக்காத முஹம்மத் என்பவரின் தந்தை அப்துல் வஹ்ஹாப் என்ற  பெயரோடு இணைத்து ஏகத்துவ கொள்கையை பேசுபவர்களை   வஹ்ஹாபிகள் ( அதாவது வஹ்ஹாபியின் கொள்கையை ஏற்றவர்கள்  என்று தந்திரமாக  விமர்சனத்தை இட்டுக்கட்டி எழுதி வைத்தனர்

இந்த உண்மையை சரியாக புரிந்திருந்தால் நாம் தமிழர் கட்சி சீமான் என்பவர் பேட்டியின் போது  சுன்னத் ஜமாத்தை தான் இஸ்லாத்தின் பெயரால் ஊடுருவல்காரர்கள் என்று  உவமை காட்டியிருப்பார்

எனவே நாம் தமிழர் சீமானும் சரி முஸ்லிம்களும் சரி  விமர்சனங்களை தெளிவாக அறிந்து  விமர்சனம் செய்யுங்கள்

சீமான் இது போல் தேவையற்ற  செய்திகளை பேசாது அரசியல் செய்திகளை மாத்திரம் பேசினால் நன்று

வளர்சி அடைந்து வரும் சூழலில் இது போல் பேட்டிகள் சீமானுக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தும்

இந்த ஆக்கம் நாம் தமிழர் கட்சி சீமானுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

வஹ்ஹாபிசம் என்ற விமர்சனத்தை  பற்றிய கூடுதலான விளக்கம் அறிய விரும்புவோர் நம்மை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்

          நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்