Posts

Showing posts from August, 2019

தாழைக்கு தாலி கட்டுவோம்

         தாழைக்கு தாலி              கட்டுவோம்    *************************                    26-08-19         கட்டுரை எண் 1262       !!J . Yaseen iMthadhi !!              *************                       ﷽                 !!!!!!!!!!!!!!!!! பிள்ளையை பெற்றால் கண்ணீர் தென்னையை பெற்றால் இளநீர் எனும் பாடல் மிகைப்படுத்த பட்டதாக இருப்பினும் தென்னை மரத்தின் பலன்  மனித சமூகத்திற்கும் பூமிக்கும் மிகவும் பயனுள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை தென்னை மரத்துக்கு தெங்கு என்றும் தாழை என்றும் பெயர்கள் உண்டு பயனுள்ள எந்த ஒரு பொருளிலும் கழிவுகள் இருப்பது எதாரத்தமே ஆனால் தென்னையில் எதை நாம் கழிவு என்று கருதுகிறோமோ அதுவும் மனிதனுக்கு ஏதோ ஒரு வகையில் பயன் தருகிறது என்பதே உண்மை இளநீர், தேங்காய் , தேங்காய் எண்ணெய் , தெழுவு , கருப்பட்டி, கள்ளு, மரம், விறகு, தேங்காய் நார்,இப்படி பல விதமான பலன்கள் தென்னையின் மூலம் பெறப்படுகிறது தென்னங் கீற்றானது கை விசிறி செய்யவும் , பந்தல் போடவும், அடுப்பு எரிப்பதற்கும் பயன்படுகிறது தென்னையை நட்டி வளர்ப்பதற்க்கு ஆசை படாதவன் சொந்த நிலத்தை வாங்குவதற்கு ஆசை

மனமகிழ்வே பெருநாள்

   மனமகிழ்வே பெருநாள்           அக இணைவே                  திருநாள்     ♦♦♦♦♦♦♦♦                 12-08-19         கட்டுரை எண் 1262       !!J . Yaseen iMthadhi !!              *************                      ﷽                 !!!!!!!!!!!!!!!!! பல விதமான சிக்கலில் அன்றாடம்  மன ரீதியான உடல் ரீதியான  உளைச்சல்களை சந்தித்து வரும் மனித சமுதாயத்திற்க்கு அதை மறந்து மனமகிழ்வோடு கழிப்பதற்க்கு இறைவன் வழங்கி இருக்கும் நாட்களே திருநாட்கள் பெருநாட்கள் இது போன்ற நாட்களில் உறவுகளோடு இணைந்து உணவு அருந்துவது சுற்றுலா பகுதிகளுக்கு செல்வது கடை வீதிகளுக்கு செல்வது மனிதனின் மகிழ்வை மேலும் மகிழ்வூட்டும் இத்தகைய திருநாட்களிலும் குடும்பத்தை புறக்கணித்து வீண் விவாதங்களை பேசுவது பகைமை பாராட்டுவது போன்ற தீய குணங்கள் இன்று மனித சமுதாயத்தில் நிலவுவது வருந்ததக்க காரியமாகும் இத்தகைய குணங்களை கடுமையாக கண்டிக்கும் மார்க்கமே இஸ்லாம் அவைகளை மறக்கடிக்க செய்யவே இஸ்லாம் இது போன்ற நாட்களில் தான தர்மங்களை அதிகமாக செய்வதையும் உணவுகளை சமைத்து ஏழைகளுக்கு வழங்குவதையும் போதிக்கிறது ஏனைய நாட்களை விட திருநாட்கள

ஆறுதலே மாமருந்து

      ஆறுதலே மாமருந்து           அரவணைப்பே அக மருந்து      ♦♦♦♦♦♦♦♦                 9-08-19         கட்டுரை எண் 1261       !!J . Yaseen iMthadhi !!              *************                       ﷽                 !!!!!!!!!!!!!!!!! உலகில் மனிதன் சந்திக்கும் நோய்களுக்கு அறிவியல் ரீதியாக பல நூறு மருந்து மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டாலும் அந்த மருந்து மாத்திரைகள் மனிதனுக்கு தரும் நிவாரணம் மற்றும் உடலியல்  உற்சாகத்தை விட மருத்துவரும் அம்மனிதனை சார்ந்த சுற்றத்தாரும் குடும்பத்தாரும் தரும் அரவணைப்பு ஆறுதல் வார்தைகளே  நோயாளிக்கு தரப்பட வேண்டிய முக்கிய நிவாரணம் லட்சக்கணக்கில் ஊதியம் வாங்கி கொண்டு  மருந்து மாத்திரைகளை வழங்கும் மருத்துவர் கூட அவரை காண வரும்  நோயாளியிடம் கடும் சொற்களை அச்சுறுத்தும் வார்த்தைகளை முறை தவறி கூறினால் அது ஒன்றே அந்த நோயாளியை மனநோயாளியாக மாற்றி கூடிய விரைவில்  மரண படுக்கை வரை இழுத்து சென்று விடும் காரணம் மனிதனின் மனமே அவனது நோயை மழுங்க வைக்கவும் செய்கிறது தடுமாற வைக்கவும் செய்கிறது மருத்துவர்களில் சிலர்கள் கூட இதை கருத்தில் கொள்ளாது நோயாளிகளிடம் பக்குவ

நீங்க எந்த வகையான ஜாஹிலிய்யா

  நீங்கள் எந்த வகையான           ஜாஹிலிய்யா  ?                 ♦♦♦♦♦♦♦♦                 05-08-19         கட்டுரை எண் 1259       !!J . Yaseen iMthadhi !!              *************                       ﷽                 !!!!!!!!!!!!!!!!! நபி ( ஸல் )அவர்களின் காலத்தில் வாழ்ந்த அறிவீனர்களை அய்யாமுல் ஜாஹிலிய்யா என்று விமர்சனம் செய்யும் முஸ்லிம்களாகிய  நம்மிடத்தில் அது போன்ற செயல்கள் இருந்தால் நாம் அவர்களை விட கேடுகெட்ட நிலையில் உள்ளவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை இதில் வேறுபாடு அவர்கள்  அய்யாமுல் ஜாஹிலிய்யா நாம் நவீன ஜாஹிலிய்யா என்பது மட்டுமே விருப்பு வெறுப்புகளை காரணம் காட்டி அய்யாமுல் ஜாஹிலிய்யா இஜ்லாமிய மார்க்கத்தையே  எதிர்த்தான் அதே காரணத்திற்காக நாம் இன்று நம்  மார்க்கத்தை ஏற்று கொண்ட கொள்கைவாதிகளையே ஏளனப்படுத்தி அவமானப்படுத்தி பிளவு ஏற்படுத்தி அர்ப மகிழ்சியை அடைந்து வருகிறோம் ஒழுக்க கேடுகளை பெறுமையாக நினைத்து அய்யாமுல் ஜாஹிலிய்யா சாதாரணமாக  அவைகளை நடைமுறை படுத்தினர் அதே ஒழுக்க கேடுகளை உரிமையாக நினைத்து நாம் வழிகேடுகளை வாரி அணைத்து  பிடித்து கொண்டுள்ளோம் அந்நியர்களிடம்

நீங்கள் எந்த ஜாஹிலிய்யா

              நீங்கள் எந்த         ஜாஹிலிய்யா ?                 ♦♦♦♦♦♦♦♦                 05-08-19         கட்டுரை எண் 1259       !!J . Yaseen iMthadhi !!              *************                       ﷽                 !!!!!!!!!!!!!!!!! நபி ( ஸல் )அவர்களின் காலத்தில் வாழ்ந்த அறிவீனர்களை அய்யாமுல் ஜாஹிலிய்யா என்று விமர்சனம் செய்யும் முஸ்லிம்களாகிய  நம்மிடத்தில் அது போன்ற செயல்கள் இருந்தால் நாம் அவர்களை விட கேடுகெட்ட நிலையில் உள்ளவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை இதில் வேறுபாடு அவர்கள்  அய்யாமுல் ஜாஹிலிய்யா நாம் நவீன ஜாஹிலிய்யா என்பது மட்டுமே விருப்பு வெறுப்புகளை காரணம் காட்டி அய்யாமுல் ஜாஹிலிய்யா இஜ்லாமிய மார்க்கத்தையே  எதிர்த்தான் அதே காரணத்திற்காக நாம் இன்று நம்  மார்க்கத்தை ஏற்று கொண்ட கொள்கைவாதிகளையே ஏளனப்படுத்தி அவமானப்படுத்தி பிளவு ஏற்படுத்தி அர்ப மகிழ்சியை அடைந்து வருகிறோம் ஒழுக்க கேடுகளை பெறுமையாக நினைத்து அய்யாமுல் ஜாஹிலிய்யா சாதாரணமாக  அவைகளை நடைமுறை படுத்தினர் அதே ஒழுக்க கேடுகளை உரிமையாக நினைத்து நாம் வழிகேடுகளை வாரி அணைத்து  பிடித்து கொண்டுள்ளோம் அந்நியர்க

குர்பானி பிராணியோடு நல்லுறவு

   குர்பானி பிராணியோடு                நல்லுறவு      ♦♦♦♦♦♦♦♦♦♦                 03-08-19         கட்டுரை எண் 1258       !!J . Yaseen iMthadhi !!                    ***********              உடல் அசைவுகளின் மூலம் வெளிப்படும் செய்கைகளை மட்டுமே இஸ்லாமிய பார்வையில் நாம் இபாதத் என்று கருதுகிறோம் அவ்வாறு  குர்பானி கொடுக்கும் பிராணிகளை நாம்  கருத கூடாது காரணம் குர்பானி என்பதும் மறுமை நன்மையை எதிர் பார்த்து செய்யப்படும் இபாதத் எனும் வணக்கமாகும் ஒரு வணக்கத்தில் எந்த அளவு நாம் ஈடுபாடுகளை செலுத்த வேண்டுமோ அந்தளவு நமது ஈடுபாட்டை குர்பானி பிராணிகள் விசயத்திலும் செலுத்த வேண்டும் குர்பானி என்பது வணக்கமே தவிர அதன்  மாமிசங்களை நாம் இலவசமாக கொடுக்கும்   இறைச்சியாக கருத கூடாது கூட்டு குர்பானியில் பங்கு பெறுவோர் கால்நடை பிராணிகளை வாங்குவதற்க்கு பங்கு தொகையை மாத்திரம் செலுத்தி விட்டு தங்களது கடமை நிறைவேற்றி விட்டது போல் எண்ணி கொண்டு  ஒதுங்கி விடுகிறார்களே தவிர அந்த குர்பானி பிராணிகளை கண்காணிப்பதிலும் அதன் மீது அன்பு செலுத்துவதிலும் பராமரிப்பதிலும்  கவனம் செலுத்துவது இல்லை பல இடங்களில் சாலைகளி

துல்ஹஜ்

     துல்ஹஜ் பத்து நாளும்       அமல்களின் வடிவமே ♦♦♦♦♦♦♦♦♦♦                   0 2-08-19         கட்டுரை எண் 125 7         !!J . Yaseen iMthadhi !!              *************              بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                    ★★★★★★★★★★★ புனிதம் வாய்ந்த நாட்களில் அது போன்ற  மாதங்களில் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்க்கு  கற்று தந்த இபாதத்துகளை நினைவு படுத்தி மக்களின் சிந்தனைகளை  அதன் செயல்பாடுகளின் பக்கம் செலுத்துவதற்க்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர வருட கணக்காக பேசி வந்த  விவாதங்களையும் கருத்து வேறுபாடுகளையும் தொடர்து பேசி கொண்டே இருப்பதும் அவைகளை  எழுதி கொண்டே இருப்பதும் விவாதித்து கொண்டே இருப்பதும் நிச்சயம்  நம்மை இபாதத்து செய்ய வேண்டிய நிலையை விட்டு  தூரமாக்கி விடும் நோன்பு மற்றும்  ஹஜ்ஜுப் மாதங்களில்  இது போன்ற சர்ச்சைகள் தான் தமிழகத்தில் பரவலாக காண படுகின்றது இந்த சர்ச்சைகள் தீர்வை தந்திருப்பதை விட கொள்கைவாதிகளிடம் நாளுக்கு நாள்  விரோதம்  குரோதம் போன்ற தீய பண்புகளை தான் வளர்த்தி உள்ளது இவைகளில் ஈடுபடாமல் தற்போதைய  2019 துல்ஹஜ்

வேற ஒருத்தன்

  வேற ஒருத்தனா இருந்தா                🙈 🙉 🙊         ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷                   1-08-17   ஆக்கம் : வேற இம்தி             ______________ டே இதே  வேற ஒருத்தனா இருந்தா உன்னை இப்ப பேச விட்ருப்பானா ?  😖 வேற ஒருத்தனா இருந்தா உன்னை நடக்கவிட்ருப்பானா  ? 😨 வேற ஒருத்தனா இருந்தா உன்னை சிரிக்க விட்ருப்பானா  ? 😞 வேற ஒருத்தனா இருந்தா உன்னை பார்க்கவிட்ருப்பானா  ? 😏 அதெல்லாம் விட்றா பரதேசி !!  வேற ஒருத்தனா இருந்தா உன்னை உசுரோட இப்ப  விட்ருப்பானா  ? 😭 😭             ************** OK நீ சொல்றா  ? 🏊 யார்ரா  அந்த வேற ஒருத்தன்  ?  👿 உருப்படியா இப்ப நீ பதில் சொல்லேன்னு வைய்யேன் 😷 வாய்ல வருது நல்லா  😥👽 நிச்சயமா உன் சோலியை வேற ஒருத்தனை வைச்சு முடிச்சிருவன்டா   ✂💉🔫 இப்படிக்கு  வேற ஒருத்தன்                  🙊🙉🙈              !!  இம்திடா !!