நீங்கள் எந்த ஜாஹிலிய்யா

              நீங்கள் எந்த
        ஜாஹிலிய்யா ?
          
     ♦♦♦♦♦♦♦♦

                05-08-19
        கட்டுரை எண் 1259
      !!J . Yaseen iMthadhi !!
             ************* 

                     ﷽
                !!!!!!!!!!!!!!!!!

நபி ( ஸல் )அவர்களின் காலத்தில் வாழ்ந்த அறிவீனர்களை அய்யாமுல் ஜாஹிலிய்யா என்று விமர்சனம் செய்யும் முஸ்லிம்களாகிய  நம்மிடத்தில்
அது போன்ற செயல்கள் இருந்தால் நாம் அவர்களை விட கேடுகெட்ட நிலையில் உள்ளவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை

இதில் வேறுபாடு அவர்கள்  அய்யாமுல் ஜாஹிலிய்யா நாம் நவீன ஜாஹிலிய்யா என்பது மட்டுமே

விருப்பு வெறுப்புகளை காரணம் காட்டி அய்யாமுல் ஜாஹிலிய்யா இஜ்லாமிய மார்க்கத்தையே  எதிர்த்தான்

அதே காரணத்திற்காக நாம் இன்று நம்  மார்க்கத்தை ஏற்று கொண்ட கொள்கைவாதிகளையே ஏளனப்படுத்தி அவமானப்படுத்தி பிளவு ஏற்படுத்தி அர்ப மகிழ்சியை அடைந்து வருகிறோம்

ஒழுக்க கேடுகளை பெறுமையாக நினைத்து அய்யாமுல் ஜாஹிலிய்யா சாதாரணமாக  அவைகளை நடைமுறை படுத்தினர்

அதே ஒழுக்க கேடுகளை உரிமையாக நினைத்து நாம் வழிகேடுகளை வாரி அணைத்து  பிடித்து கொண்டுள்ளோம்

அந்நியர்களிடம் வரம்பு மீறுதலை அய்யாமுல் ஜாஹிலிய்யா அவர்களின் உரிமையாக நினைத்தனர்

அதே அந்நியர்களிடம் பொதுதளங்களில்  சகஜமாக பழகுவதை நாம் இன்று  பேஷனாக கருதுகிறோம்

ஈமான் இல்லாது தவறி செல்வோரை விட
ஈமான் இருக்கும் நிலையில் வழி தவறி செல்லும் நாமே இறைவனின் சந்நிதானத்தில்  பெரிய குற்றவாளி 

இப்போது எடை போட்டு பாருங்கள்

நீங்கள் அய்யாமுல் ஜாஹிலிய்யாவா

அல்லது நவீன ஜாஹிலிய்யாவா   ?

 ‌قَالَ اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰـهِلِيْنَ‏ 

அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்றார்

     (அல்குர்ஆன் : 2:67)

خُذِ الْعَفْوَ وَاْمُرْ بِالْعُرْفِ وَاَعْرِضْ عَنِ الْجٰهِلِيْنَ‏ 

எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக

நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்

    (அல்குர்ஆன் : 7:199)

     நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்