மனமகிழ்வே பெருநாள்

   மனமகிழ்வே பெருநாள்
          அக இணைவே
                 திருநாள்

    ♦♦♦♦♦♦♦♦

                12-08-19
        கட்டுரை எண் 1262
      !!J . Yaseen iMthadhi !!
             *************

                     ﷽
                !!!!!!!!!!!!!!!!!

பல விதமான சிக்கலில் அன்றாடம்  மன ரீதியான உடல் ரீதியான  உளைச்சல்களை சந்தித்து வரும் மனித சமுதாயத்திற்க்கு அதை மறந்து மனமகிழ்வோடு கழிப்பதற்க்கு இறைவன் வழங்கி இருக்கும் நாட்களே திருநாட்கள் பெருநாட்கள்

இது போன்ற நாட்களில் உறவுகளோடு இணைந்து உணவு அருந்துவது சுற்றுலா பகுதிகளுக்கு செல்வது கடை வீதிகளுக்கு செல்வது மனிதனின் மகிழ்வை மேலும் மகிழ்வூட்டும்

இத்தகைய திருநாட்களிலும் குடும்பத்தை புறக்கணித்து வீண் விவாதங்களை பேசுவது பகைமை பாராட்டுவது போன்ற தீய குணங்கள் இன்று மனித சமுதாயத்தில் நிலவுவது வருந்ததக்க காரியமாகும்

இத்தகைய குணங்களை கடுமையாக கண்டிக்கும் மார்க்கமே இஸ்லாம்

அவைகளை மறக்கடிக்க செய்யவே இஸ்லாம் இது போன்ற நாட்களில் தான தர்மங்களை அதிகமாக செய்வதையும் உணவுகளை சமைத்து ஏழைகளுக்கு வழங்குவதையும் போதிக்கிறது

ஏனைய நாட்களை விட திருநாட்களில் இறைவனின் பெயரை அதிகமாக துதிக்குமாறு கட்டளை போட்டு  அதன் மூலம் மனிதனிடம் தவறாக நடப்பதை இறைவன் கண்காணிக்கிறான் என்ற தத்துவ பாடத்தை இஸ்லாம் போதிக்கிறது

وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏

உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)

   (அல்குர்ஆன் : 2:185)

عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ؓ اَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُوْلُ: لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ

உறவைத் துண்டிப்பவர் சுவர்க்கம் செல்லமாட்டார்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஜுபைருப்னு முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

            நூல். புகாரி

     நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்