தாழைக்கு தாலி கட்டுவோம்
தாழைக்கு தாலி
கட்டுவோம்
*************************
26-08-19
கட்டுரை எண் 1262
!!J . Yaseen iMthadhi !!
*************
﷽
!!!!!!!!!!!!!!!!!
பிள்ளையை பெற்றால் கண்ணீர்
தென்னையை பெற்றால் இளநீர்
எனும் பாடல் மிகைப்படுத்த பட்டதாக இருப்பினும் தென்னை மரத்தின் பலன் மனித சமூகத்திற்கும் பூமிக்கும் மிகவும் பயனுள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை
தென்னை மரத்துக்கு தெங்கு என்றும் தாழை என்றும் பெயர்கள் உண்டு
பயனுள்ள எந்த ஒரு பொருளிலும் கழிவுகள் இருப்பது எதாரத்தமே
ஆனால் தென்னையில் எதை நாம் கழிவு என்று கருதுகிறோமோ அதுவும் மனிதனுக்கு ஏதோ ஒரு வகையில் பயன் தருகிறது என்பதே உண்மை
இளநீர், தேங்காய் , தேங்காய் எண்ணெய் , தெழுவு , கருப்பட்டி, கள்ளு, மரம், விறகு, தேங்காய் நார்,இப்படி பல விதமான பலன்கள் தென்னையின் மூலம் பெறப்படுகிறது
தென்னங் கீற்றானது கை விசிறி செய்யவும் , பந்தல் போடவும், அடுப்பு எரிப்பதற்கும் பயன்படுகிறது
தென்னையை நட்டி வளர்ப்பதற்க்கு ஆசை படாதவன் சொந்த நிலத்தை வாங்குவதற்கு ஆசை படுவது அவசியமற்றது
குடும்பத்தில் ஒருவரை இழக்கும் போது ஏற்படும் மன வருத்தம் நிச்சயம் வீட்டில் வளர்ந்துள்ள தென்னை மரத்தை வெட்டும் நிலை ஏற்படும் போது உருவாகும்
அந்த அளவுக்கு மனிதனுக்கு பயனுள்ள மரமாக இறைவன் தென்னை மரத்தை ஆக்கியுள்ளான்
மனித வாழ்வில் திருமணம் எந்தளவுக்கு ஆத்ம திருப்தியை பெற்று தருகிறதோ அந்தளவுக்கு தென்னையும் மனித வாழ்வோடு ஒன்றிணைந்த பாக்கியமாகும்
எனவே இயன்றவரை தாழைக்கும் தாலி கட்டுவோம்
عَنْ اَبِيْ اَيُّوْبَ اْلاَنْصَارِيِّ ؓ عَنْ رَسُوْلِ اللهِ ﷺ اَنَّهُ قَالَ: مَا مِنْ رَجُلٍ يَغْرِسُ غَرْسًا اِلاَّ كَتَبَ اللهُ لَهُ مِنَ اْلاَجْرِ قَدْرَ مَا يَخْرُجُ مِنْ ثَمَرِ ذلِكَ الغِرَاسِ
எவர் ஒருவர் மரம் ஒன்றை நட்டு அம்மரத்திலிருந்து எத்தனை பழங்கள் உற்பத்தியாகுமோ அவைகளின் அளவுக்கு அல்லாஹுதஆலா மரத்தை நட்டவருக்குக் கூலியை எழுதுவான் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஅய்யூப் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள்
நூல் முஸ்னத் அஹ்மத்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment