ஆறுதலே மாமருந்து

      ஆறுதலே மாமருந்து
         
அரவணைப்பே அக மருந்து

     ♦♦♦♦♦♦♦♦

                9-08-19
        கட்டுரை எண் 1261
      !!J . Yaseen iMthadhi !!
             ************* 

                     ﷽
                !!!!!!!!!!!!!!!!!

உலகில் மனிதன் சந்திக்கும் நோய்களுக்கு அறிவியல் ரீதியாக பல நூறு மருந்து மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டாலும் அந்த மருந்து மாத்திரைகள் மனிதனுக்கு தரும் நிவாரணம் மற்றும் உடலியல்  உற்சாகத்தை விட மருத்துவரும் அம்மனிதனை சார்ந்த சுற்றத்தாரும் குடும்பத்தாரும் தரும் அரவணைப்பு ஆறுதல் வார்தைகளே  நோயாளிக்கு தரப்பட வேண்டிய முக்கிய நிவாரணம்

லட்சக்கணக்கில் ஊதியம் வாங்கி கொண்டு  மருந்து மாத்திரைகளை வழங்கும் மருத்துவர் கூட அவரை காண வரும்  நோயாளியிடம் கடும் சொற்களை அச்சுறுத்தும் வார்த்தைகளை முறை தவறி கூறினால் அது ஒன்றே அந்த நோயாளியை மனநோயாளியாக மாற்றி கூடிய விரைவில்  மரண படுக்கை வரை இழுத்து சென்று விடும்

காரணம் மனிதனின் மனமே அவனது நோயை மழுங்க வைக்கவும் செய்கிறது
தடுமாற வைக்கவும் செய்கிறது

மருத்துவர்களில் சிலர்கள் கூட இதை கருத்தில் கொள்ளாது நோயாளிகளிடம் பக்குவம் இல்லாது  நடந்து கொள்ளும் நிலையை காண முடிகின்றது

நோயாளிகளிடம் அவர்கள் உடலியல்  அடைந்திருக்கும் ஆபத்தை எச்சரிக்கை செய்வதை நாம் குறை கூறவில்லை
ஆனால் அந்த எச்சரிக்கையை தங்களை கடவுளாக கருதி கொண்டு நோயாளியிடம் பயமுறுத்தும் தோரணையில் எடுத்து கூறுவதை தான் நாம் தவறு என்று இங்கு சுட்டி காட்டுகிறோம்

அதே போல் ஆலோசனை கூறுகிறோம் எனும் பெயரில் புத்தகங்கள் சமூகவலைதளங்களில் காணும் மருத்துவ குறிப்புகளை நோயாளிகளிடம் சிறந்த மருத்துவமாக எடுத்து கூறுவது 

இதே போல் நோயால் அவர் மாண்டு போனார் இவர் அன்றாடம் சிரமத்தை அனுபவிக்கிறார்
எனவே நீங்கள் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்று நோயாளியிடம் அவரது உடலியல் நோய் தொடர்பான உண்மை நிலையை அறியாது  எச்சரிக்கை எனும் பெயரில்  ஆலோசணை கூறும் உறவுகள் நண்பர்கள் சற்று நிதானத்தை கடை பிடிக்க வேண்டும்

இது போக எந்த நோய்கள் நம்மை தாக்கினாலும் அந்த நோய்கள் ஏற்படுவதற்கு அமைந்துள்ள  தவறான பின்னனியை தவிர்க்க முயற்சிப்பதோடு

தற்போதைய நோய் மூலம் இறைவன் நம் ஈமானை சோதிப்பதின் மூலம் நாம் செய்த முற்பாவங்களை இதன் மூலம் இறைவன் தனது அருளால் போக்கி விடுவான் என்ற நல்ல நம்பிக்கையும் நோயாளிகள் வளர்த்தி கொள்ள வேண்டும்

عَنْ عَبْدِ اللهِ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ عَزَّي مُصَابًا فَلَهُ مِثْلُ اَجْرِهِ

எவரேனும் துன்பத்தில் சிக்குண்டவருக்கு ஆறுதல் கூறினால் துன்பத்தில் சிக்குண்டவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்று ஆறுதல் கூறுபவருக்கும் கிடைக்கும் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

          நூல் திர்மிதி

5641 5642 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் நோய் துக்கம் கவலை தொல்லை மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை
இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்

   நூல் ஸஹீஹ் புகாரி

    நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்