துல்ஹஜ்
துல்ஹஜ் பத்து நாளும்
அமல்களின் வடிவமே
♦♦♦♦♦♦♦♦♦♦
02-08-19
கட்டுரை எண் 1257
!!J . Yaseen iMthadhi !!
*************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
புனிதம் வாய்ந்த நாட்களில் அது போன்ற மாதங்களில் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்க்கு கற்று தந்த இபாதத்துகளை நினைவு படுத்தி மக்களின் சிந்தனைகளை அதன் செயல்பாடுகளின் பக்கம் செலுத்துவதற்க்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர
வருட கணக்காக பேசி வந்த விவாதங்களையும் கருத்து வேறுபாடுகளையும் தொடர்து பேசி கொண்டே இருப்பதும் அவைகளை எழுதி கொண்டே இருப்பதும் விவாதித்து கொண்டே இருப்பதும் நிச்சயம் நம்மை இபாதத்து செய்ய வேண்டிய நிலையை விட்டு தூரமாக்கி விடும்
நோன்பு மற்றும் ஹஜ்ஜுப் மாதங்களில் இது போன்ற சர்ச்சைகள் தான் தமிழகத்தில் பரவலாக காண படுகின்றது
இந்த சர்ச்சைகள் தீர்வை தந்திருப்பதை விட கொள்கைவாதிகளிடம் நாளுக்கு நாள் விரோதம் குரோதம் போன்ற தீய பண்புகளை தான் வளர்த்தி உள்ளது
இவைகளில் ஈடுபடாமல் தற்போதைய 2019 துல்ஹஜ் மாதத்தை சீரான முறையில் ஒவ்வொருவரும் செயல் படுத்த முடிவு எடுப்போம்
அது போன்ற விவாதங்களை செய்யும் நபர்களிடம் அவ்விசயத்தில் இருந்து விலகி இருப்பதே தற்கால சூழலில் சிறப்பான முடிவாகும்
!! இன்ஷா அல்லாஹ் !!
-------------
துல்ஹஜ் பத்து நாளும்
அமல்களின் வடிவமைப்பே
******
روى ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وآله وسلم: «مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ» يَعْنِي أَيَّامَ الْعَشْرِ، قَالُوا: يَا رَسُولَ اللهِ، وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ؟ قَالَ: «وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ، إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ، فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ»
துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து நாட்களில் செய்யும் அமல்களை நேசிப்பது போல் அல்லாஹ் வேறு எந்த அமல்களையும் நேசிப்பது கிடையாது என்று கூறியவுடன்
அங்கிருந்த தோழர்கள், யா ரஸூல்லல்லாஹ்!
ஜிஹாத் செய்வதை விடவும் அதை அல்லாஹ் நேசிக்கின்றானா? என்று கேட்டபோது
ஆம், என்று கூறி விட்டு என்றாலும் ஜிஹாதில் தனது உயிரையும், தனது பொருளையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தவர்களைத் தவிர என்று கூறினார்கள்
அறிவிப்பவர்
இப்னு அப்பாஸ் ( ரலி)
(புஹாரி-969, திர்மிதி-688)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment