குர்பானி பிராணியோடு நல்லுறவு
குர்பானி பிராணியோடு
நல்லுறவு
♦♦♦♦♦♦♦♦♦♦
03-08-19
கட்டுரை எண் 1258
!!J . Yaseen iMthadhi !!
***********
உடல் அசைவுகளின் மூலம் வெளிப்படும் செய்கைகளை மட்டுமே இஸ்லாமிய பார்வையில் நாம் இபாதத் என்று கருதுகிறோம்
அவ்வாறு குர்பானி கொடுக்கும் பிராணிகளை நாம் கருத கூடாது
காரணம் குர்பானி என்பதும் மறுமை நன்மையை எதிர் பார்த்து செய்யப்படும் இபாதத் எனும் வணக்கமாகும்
ஒரு வணக்கத்தில் எந்த அளவு நாம் ஈடுபாடுகளை செலுத்த வேண்டுமோ அந்தளவு நமது ஈடுபாட்டை குர்பானி பிராணிகள் விசயத்திலும் செலுத்த வேண்டும்
குர்பானி என்பது வணக்கமே தவிர அதன் மாமிசங்களை நாம் இலவசமாக கொடுக்கும் இறைச்சியாக கருத கூடாது
கூட்டு குர்பானியில் பங்கு பெறுவோர் கால்நடை பிராணிகளை வாங்குவதற்க்கு பங்கு தொகையை மாத்திரம் செலுத்தி விட்டு தங்களது கடமை நிறைவேற்றி விட்டது போல் எண்ணி கொண்டு ஒதுங்கி விடுகிறார்களே தவிர
அந்த குர்பானி பிராணிகளை கண்காணிப்பதிலும் அதன் மீது அன்பு செலுத்துவதிலும் பராமரிப்பதிலும் கவனம் செலுத்துவது இல்லை
பல இடங்களில் சாலைகளில் அனாதையாக திரியும் நேர்சை பிராணிகளை போலே கண்காணிக்காது விட்டு விடுகின்றனர்
அந்த பிராணிகளுக்கு சரியாக தீனியும் போடுவது இல்லை குடிப்பதற்க்கு தண்ணீர் கூட கொடுப்பது இல்லை
பிராணிகளை வாங்கும் நேரத்தில் எந்தளவு திடகாத்திரமாக சுறுசுறுப்பாக பார்க்கிறோமோ அந்த நிலையை ஓரிரு நாட்களில் இழந்து கண்காணிப்பு இல்லாது வாடிப்போய் கறி கடைகளில் வெட்டப்படும் பிராணிகளாகவே குர்பானி பிராணிகள் பரிதாபமாக காட்சியளிக்கிறது
1 பிராணிகளை சில நாட்களுக்கு முன்பே வாங்கி அவைகளோடு தொடர்பை ஏற்படுத்தி அவைகள் அறுக்கப்படும் நேரத்தில் அதன் பிரிவு நம் உள்ளத்தில் கவலையை ஏற்படுத்தும் அளவு பாசத்தோடு வளர்க்க வேண்டும்
2 அவைகளின் ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டும்
3 பசி என்ற உணர்வு ஏற்படாத அளவுக்கு அவைகளுக்கு நன்றாக தீனிகளை வாங்கி போட வேண்டும்
4 மழை வெயில் போன்ற அவைகளால் தாங்க முடியாத அளவுக்குள்ள சூழல்களை தவிர்த்து அதன் தங்கும் இடங்களை சரியாக கண்காணிக்க வேண்டும்
**********
1716. அலீ(ரலி) அறிவித்தார்
பலிப் பிராணிகளை கவனித்துக் கொள்ளுமாறும் அவற்றை அறுப்பதற்குக் கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் எனக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என அலீ(ரலி) கூறினார் என உள்ளது
நூல் ஸஹீஹ் புகாரி
*******
1806. அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால் மறுமை நாளில் அவை முன்பு ஒருபோதும் இருந்திராத அளவிற்குக் கொழுத்த நிலையில் வரும் அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார்
அந்த ஒட்டகங்கள் குதித்தோடி வந்து தம் கால்களால் அவரை மிதிக்கும்
மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால் மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெருத்த நிலையில் அவரிடம் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார்
அந்த மாடுகள் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும் கால்களால் மிதிக்கும்
அவ்வாறே ஆடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையைச் செய்யாமலிருந்தால் அவை முன்பு இருந்ததைவிடப் பெரியவையாக மறுமை நாளில் வரும்
அவற்றுக்காக அவர் விசாலமானதொரு மைதானத்தில் அமர்வார் அவை தம் கொம்புகளால் அவரை முட்டும் கால்குளம்புகளால் மிதிக்கும் அந்த ஆடுகளில் கொம்பற்றவையோ கொம்பு முறிந்தவையோ இருக்காது
நூல் ஸஹீஹ் முஸ்லிம்
************
மதீனாவில் குர்பானிப் பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம் (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்
அறிவிப்பவர் : அபூஉமாமா(ரலி)
நூற்கள் : அபூஅவானா
புகாரி(தஃலீக்)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment