யார் இவன்
யார் இவன் ?
********
கட்டுரை எண் 1549
***************
மனிதரில் இப்படியும் உண்டு
உன்னை காணும் போது
முகம் சுளிப்பான்
உன் மீது வெறுப்பை காட்டுவான்
உன்னைப்பற்றி தவறான எண்ணத்தை
பிறரிடம் ஊட்டுவான்
நீ அவனை கடக்கும் போது
அவனருகில் இருப்பவனிடம் உன்னைப்பற்றி குறை கூறுவான்
உனது நட்புகளை முறித்து விட தந்திரமாக
முயற்சி செய்வான்
உன்னை சமூகத்தில் இருந்து ஒதுக்கி விட காத்திருப்பான்
உனது துன்பத்தில்
இன்பம் அடைவான்
உனது கவலை அவனுக்கு மகிழ்வாக தோன்றும்
உனக்கு ஏற்படும் இழப்பு
அவனுக்கு வெற்றியாக தோன்றும்
ஆனால் அவனைப்பற்றி
உன் மனம் உன்னிடம் கூறும்
இவன் யார் ?
இவனுக்கும் நமக்கும்
என்ன சம்மந்தம்
இவன் விசயத்தில்
நாம் தலையிட்டது இல்லையே
இவனைப்பற்றி கற்பனை கூட
இதுவரை செய்தது இல்லையே
நம்மை எதிர்ப்பதால் இவனுக்கு என்ன இலாபம்
ஏன் இவன் இவ்வளவு கேவலமாக இருக்கிறான்
நீ நன்றாக அறிந்து கொள் !!!
உன்னிடம் இருந்து எவ்வித தாக்குதலும் இல்லாமல் ஒருவன் உன்னை எதிரியாக
கருத மாட்டான்
உன்னைப்பற்றிய தவறான செய்திகளை
எவனோ ஒருவன் அவனது உள்ளத்தில் திணித்திருப்பான்
அல்லது அவன் கண் முன்னே
அவனை விட நீ பொருளாதாரத்தில்
முன்னேறியவனாக தென்பட்டு இருப்பாய்
உன்னிடம் இருக்கும் சில தனிப்பட்ட திறமைகள் அவனிடம் இல்லாது இருக்கலாம்
அவன் இருக்கும் ஊர் உனக்கு
அந்நிய ஊராக இருக்கக்கூடும்
இதன் பின்னனியில் அவனிடம் இருக்கும்
ஒரே தீயகுணம் பொறாமையை தவிர வேறில்லை
பொறாமைக்காரனின் தீங்கில் இருந்து இறைவனிடம் பாதுகாப்பை தேடுவதை தவிர உனக்கு இவன் விசயத்தில் மாற்று வழியும் இல்லை
அவனைப்பற்றி யோசித்து
உனது நேரத்தை நீ வீணடிக்காதே
அவனைக்கண்டால் ஒதுங்கி செல்வதே
உனக்கு கண்ணியம்
அவனைப்பற்றி எவரிடமும் கருத்து கூறவும் விசாரிக்கவும் முனையாதே
உனது மவுனமே அவனுக்கான அறிவார்ந்த பதில்
நேரடியாக அவன் உன்னை அணுகும் வரை
அவனும் நீ பார்க்கும் ஆயிரமாயிறம்
அறிமுகமற்ற முகங்களில் ஒன்று
اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்தோம்
அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்
(அல்குர்ஆன் : 4:54)
وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்)
(அல்குர்ஆன் : 113:5)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
3-2 -26
Comments
Post a Comment