இஸ்லாம் முஸ்லிம்

              இஸ்லாம்  முஸ்லிம் 
         தனித்துவம் மகத்துவம் 
                    *****************

உரிமை அல்லது இளைய பருவம் எனும் பெயரில் கண்டு கொள்ளப்படாத சிறு தவறுகளே 
ஒரு மனிதனை ஒழுக்கக்கேடுகளின் பக்கம் விரைவாக  இழுத்துச்செல்கிறது 



கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் குடும்பத்தில் மட்டுமே 
வழிகேடுகள் மனிதன் எனும் முறையில்  மறைந்தும்  குறைந்தும் காணப்படும் 

மனிதனை பக்குவப்படுத்தும் நெறிமுறைகள் இஸ்லாத்தை தவிர வேறெதிலும் அரிதாகவே காணப்படும் 


இஸ்லாத்தில் மட்டுமே மனிதனை பக்குவப்படுத்தும் வழிமுறைகள் அனைத்தும் வாழ்வியல்  சட்டங்களாகவே  வகுக்கப்பட்டுள்ளது


தொழுகை 
நோன்பு 
தஸ்பீஹ் போன்றவை மனிதனின் மனதை கட்டுக்குள் வைக்க ஆன்மீக பயிற்சி தருகிறது 

பொதுச்சட்டம்
குற்றவியல் சட்டம் 
சமூகச்சட்டம் போன்றவை தனிமனிதனை அச்சுறுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான வாழ்கை முறையை உருவாக்கி வைத்துள்ளது 

இறைவனின் கண்காணிப்பு இல்லாது 
எந்த நொடியும் மனிதனால் வாழ இயலாது 
மறைக்க இயலாது 
தண்டனை பெறுவதில் இருந்து தப்பிக்க இயலாது என்ற இறை நம்பிக்கையே நேர்வழியில் இருந்து மனிதன்  பிசகாதிருக்க 
உறுதுணை செய்கிறது 


பாடசாலைகளும்
கல்லூரிகளும்
பல்கலை கழகங்களும்
ஆய்வு அரங்கங்களும்
அறிவியல் மையங்களும்
கற்றுத்தராத அல்லது கண்டு கொள்ளாத 
அல்லது கண்டு கொள்ள இயலாத 
அனைத்திலும் தலையிட்டு மனிதனின் வாழ்வுக்கு 
ஆசானாக
இஸ்லாமே விளங்குகிறது 


இந்து மதம்
கிருஸ்தவ மதம்
சீக்கிய மதம் 
ஜைன மதம் 
போன்றவைகளை குறிப்பிடுவதை போல் இஸ்லாமிய மதம் என்று குறிப்பிடாது இஸ்லாமிய மார்க்கம் என்று பிரித்து சொல்வதற்கும்  
இவையே மூல காரணம் 

முஸ்லிம் என்ற அரபுச்சொல்லே
கட்டுப்பட்டவன் என்ற அழகான பொருளைத்தருகிறது 

உன்னை நீ குறிப்பிடும் போதும் முஸ்லிம் 
என்றே குறிப்பிடுவாய்
உன்னை பிறர் அடையாளப்படுத்தும் போதும் முஸ்லிம் என்றே குறிப்பிடப்படுவாய் 

இதுவே ஒரு முஸ்லிமின் தனித்துவம் 
இஸ்லாத்தின் மகத்துவம் 


وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ‌  وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ‏

இஸ்லாம் அல்லாத (வேறு) வழியை எவரேனும் விரும்பினால் 
அவரிடமிருந்து அவை ஒப்புக் கொள்ளப்படவே  மாட்டாது 
அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில்  இருப்பார்

(அல்குர்ஆன் : 3:85)



   நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                               2-2-26








Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்