ஆத்தீகம் நாத்தீகம்
நாத்தீகனும் ஆத்தீகனே
*********************
கட்டுரை எண் 1548
************
அறிவியலை அல்லது இயற்கையை கடவுளாக ஏற்றுக்கொண்டவனுக்கு
புதிய கடவுள் தேவைப்படாது
காரணம் கடவுளை ஆத்தீகர்கள் சர்வ பலம் பெற்றவராக நம்புவதை போலவே
நாத்தீகர்களும் இயற்கை நம்பிக்கையாளர்களும் அறிவியலை நம்புகின்றனர்
அறிவியல் துணையால்
எதையும் சாதிக்க முடியும்
இயற்கையே அனைத்தையும் படைத்தது படைத்துக்கொண்டுள்ளது
இயற்கையே அனைத்தையும் அழித்தது
இனியும் அழிக்கும்
இயற்கையை மீறி மனிதனால் எதுவும் செய்ய இயலாது
இதுவே கடவுள் மறுப்பாளர்களின்
வாதமாகவும் உள்ளது
இந்த நம்பிக்கையுள்ள நாத்தீகர்களுக்கும் கடவுளை நம்பும் ஆத்தீகர்களுக்கும் இடையில்
என்ன வேறுபாடு உள்ளது ?
கடவுளை மாற்றிக்கொண்டார்களே தவிர
கடவுளை இவ்விரு சாராரும் மறுக்கவில்லை
வானை படைத்தது யார் ?
கடவுள்
பூமியை படைத்தது யார் ?
கடவுள்
மிருகங்களை படைத்தது யார் ?
கடவுள்
இதே கேள்விகளுக்கான பதிலில் கடவுள் என்பதற்கு பதிலாக இயற்கை என்று பதித்து விட்டால் நாத்தீகம்
இந்த வாதத்தை அறிவுப்பூர்வமானது என்று வாதிக்கும் எவரும் அறிவிலியாக மட்டுமே இருக்க முடியும்
அப்படியானால் உண்மையான நாத்தீகம் எது ?
நான் நானாகவே உருவாகிக்கொண்டேன்
மரம் அதுவாகவே உருவாகிக்கொண்டது
கால்நடைகள் அதுவாகவே உருவாகிக்கொண்டது
என்று வாதித்தால் மட்டுமே அதற்கு நாத்தீகம் என்று சொல்லலாம்
ஆனால் இவ்வாதத்தை நாத்தீகனே ஏற்றுக்கொள்ள மாட்டான்
காரணம் நாத்தீகனும் அவனாகவே உருவாகிக்கொள்ளவில்லை
உலகம் தோன்றிய நாள் முதல் இந்நிமிடம் வரை எந்த நாத்தீகனும் பிரபஞ்சம் தோன்றியதற்கு அறிவியலே காரணம் என்றும் உளரவில்லை
ஒரு பொருள் நிஜமாக இருக்கிறது என்றால் அதை உருவாக்கியவன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருப்பான் என்பதை அறியவும் உணரவும் அறிவியல் தேவை இல்லை
பகுத்தறிவே போதுமானது
மனிதனால் உருவாக்கிக்கொண்ட
மூடநம்பிக்கைகளையும் செதுக்கி கொண்ட சிலைகளையும் தகர்ப்பதற்கு சிந்தனையற்று உருவாக்கிக்கொண்ட
மூட நம்பிக்கை தான் நாத்தீகமே தவிர
நிதர்சன உண்மைகளை மறுப்பதற்கு உருவாக்கப்பட்டது அல்ல மூட நாத்தீகம் என்பது
அந்த நிதர்சன உண்மைகளை தான்
இப்பதிவில் மேற்கோள் காட்டியுள்ளோம்
பல தகப்பனுக்கு பிறந்தேன் என்பதும் மூடநம்பிக்கை
தகப்பனே இல்லாமல் பிறந்தேன் என்பதும் மூடநம்பிக்கை
பல தகப்பனுக்கு பிறந்தேன் என்பதை மறுக்கும் பகுத்தறிவு
ஒரு தகப்பனுக்கு பிறந்தேன் என்பதை மறுக்காது
பல தெய்வ வழிபாடு என்பதும்
தெய்வமேஇல்லை என்று வாதிடுவதும் இவ்வகையை சார்ந்ததே
அந்த ஒரு கடவுளை கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்து காட்டினால் நம்புவேன் என்று வாதிப்பது பகுத்தறிவு அல்ல
தெருவில் சுற்றும் பகுத்தறிவற்ற நாய்களின் கண்களுக்கு முன்னால் ஒன்று தென்பட்டாலும் அவைகளும் அதை உண்மை என்று நம்பும்
கண்களை கொண்டு கடவுளை நூறு சதவிகிதம் அறிய முடியாது
மாறாக பகுத்தறிவை கொண்டே எதையும் உண்மை என்பதை புரிய முடியும்
لَوْ كَانَ فِيْهِمَاۤ اٰلِهَةٌ اِلَّا اللّٰهُ لَـفَسَدَتَا فَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُوْنَ
(வான், பூமி ஆகிய) இவற்றில் ( ஏகஇறைவனாகிய ) அல்லாஹ்வையன்றி
வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்
நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும் சிம்மாசனத்தின் இறைவனாம் அல்லாஹ் அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய அறிவீன ) தன்மைகளிலிருந்து
மிகவும் தூய்மையானவன்
(அல்குர்ஆன் : 21:22)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
1-2-2026
Comments
Post a Comment