Ai நுண்ணறிவு தொழில் நுட்பம்
A i செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் ******************* அறிவியல் வளர்ச்சியின் தற்போதைய உச்சம் Ai தொழில் நுட்பம் ( செயற்கை நுண்ணறிவு) தொழில் நுட்பம் அறிவியல் வளர்ச்சி எந்தளவுக்கு முன்னேற்றம் அடைகிறதோ அந்தளவுக்கு மனித சமூகத்தின் சிந்தனையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்பதே பகுத்தறிவு கூறும் முடிவு ஆனால் நடைமுறையில் அறிவியல் வளர்ச்சி மனித சமூகத்தின் மூளையை முரண்படச்செய்கிறது மங்கச்செய்கிறது வழிகேடுகளை நோக்கி பாயச்செல்கிறது என்பதே நடைமுறை குறிப்பாக சமூகவலைத்தளத்தில் காணும் A i தொழில் நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை உண்மை என்று கருதி பரப்புவோரும் அதற்கு சுபுஹானல்லாஹ் அல்லாஹீ அக்பர் என்று பொய்களுக்கு இறைவனை துதிப்போரும் ஏராளம் உண்டு சிந்தனைக்கு முதலிடம் தராது தனது அலங்காரத்திற்கு முதலிடம் கொடுத்து தனது புகைப்படங்களை பரவவி...