குடும்பத்தலைவனின் அன்பளிப்பு

      குடும்பத்தலைவனின் அன்பளிப்பு
                        **************
                கட்டுரை எண்  1518
                      *************

சந்ததிகளுக்கு சொத்துக்களை சேகரித்து செல்வதை மனித சமூகம் எதிர்பார்த்தாலும் 

வாழ்வில் எது போன்ற இழப்புகளை சந்தித்தாலும் மனம் தளராது இருப்பதற்குரிய மனஉறுதியை அறிவுரையாலும் தனது செயல்முறையாலும்
 தகப்பன்  கற்றுக்கொடுத்து செல்வதே குடும்பத்திற்கு கொடுக்கும் அன்பளிப்புகளில் மிகச்சிறந்தது


மருந்து மாத்திரைகள் தரும் ஊக்கத்தை விட மனஉறுதி தரும் ஊக்கமே வலுவானது 


மனதில் ஊக்கம் இல்லாதவர்களுக்கு லட்சங்களை செலவு செய்தும் தன்னம்பிக்கையை வளர்க்க இயலாது


திடீரென ஏற்படும் கஷ்டங்களின் போது 
என்ன செய்வது என்று யோசித்து புலம்புவதை விட இது போன்ற சந்தர்ப்பத்தில் எனது தந்தை எந்நிலையில் எதிர் கொண்டார்  என்று குடும்பத்தாருக்கு  உடனே நினைவில் வர வேண்டும்



அந்த மனஉறுதியை இறைநம்பிக்கை எனும் மாமருந்தை தவிர வேறு 
எதன் மூலமும் உருவாக்க இயலாது 

படைப்பினங்கள் துணையிருக்க படைத்தவனின் துணை எதற்கு என்ற நாத்தீக குருட்டு நம்பிக்கையை கைவிட்டு படைத்தவனின் துணை இருப்பின் படைப்பினங்கள் தானாகவே முன் வருவார்கள் என்பதே இறைநம்பிக்கையின் சாரம் 


இறைவனின் நாட்டம் இல்லாது எதுவும் அணுகாது எதுவும் நம்மை விட்டு விலகாது என்பதே இறைநம்பிக்கையின் அஸ்த்திவாரம்


மரணமே எளிதாக மனிதனை அடையும் பொழுது சிரமங்கள் நம்மை தழுவுவதில் என்ன ஆச்சரியம் என்ற எதிர் சிந்தனையே இறைநம்பிக்கையை வலுப்படுத்தும்


இறைவன் விதித்துள்ள விதிக்கு முன் எவரது சதியும் எடுபடாது என்ற நம்பிக்கையே எதிரிகளின் பயத்தை குடும்பத்தாரின் இதயம் குறைக்கும் 

கணவன் இறந்து விட்டால் கண்ணத்தில் கை வைத்து வாழ்வே தொலைந்தது போல் புலம்பினால் குடும்பத்தலைவன் தனது மனைவிக்கு சரியான பாடத்தை கற்றுத்தரவில்லை என்றே பொருள்

தகப்பன் இறந்த பிறகு  விரக்தியை சுமந்து கொண்டு சந்ததிகள் திரிந்தால் தனது சந்ததிகளுக்கு சரியான முன்னுதாரணத்தை தகப்பன் வழிகாட்டவில்லை என்பதே பொருள் 


யாரை இழந்தாலும் மறுமையில் காணும் பாக்கியத்தை இறைவன் வழங்குவான் என்ற நம்பிக்கையே குடும்பத்தாரை வாழ்வில்  தலை நிமிர வைக்கும்


நபிகளாரின் வழிகாட்டல்கள் அந்த மனஉறுதியை நிச்சயம் பெற்றுத்தரும்



عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: كُنْتُ خَلْفَ النَّبِيِّؐ يَوْماً فَقَالَ: يَا غُلاَمُ! إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ اِحْفَظِ اللّٰهَ يَحْفَظْكَ، اِحْفَظِ اللّٰهَ تَجِدْهُ تُجَاهَكَ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللّٰهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللّٰهِ، وَاعْلَمْ أَنَّ اْلاُمَّةَ لَوِاجْتَمَعَتْ عَلَي أَنْ يَّنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفُعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللّٰهُ لَكَ، وَإِنِ اجْتَمَعُوا عَلَي أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللّٰهُ عَلَيْكَ، رُفِعَتِ اْلاَقْلاَمُ وَجَفَّتِ الصُّحُفُ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
ஒரு முறை நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (ஒரு வாகனத்தில்) அமர்ந்திருந்தேன்

 மகனே உனக்கு (முக்கியமான) சில விஷயங்களைக் கற்றுத் தருகிறேன் அல்லாஹ் வின் கட்டளைகளைப் பாதுகாப்பீராக!
அவன் உம்மைப் பாதுகாப்பான் அவனது கடமைகளைப் பேணிவந்தால் அவனை உனக்கு முன்னால் பெற்றுக் கொள்வீர் (அவனுடைய உதவி உனக்கு கிடைத்துக் கொண்டிருக்கும்) 
ஏதேனும் கேட்க நீர் விரும்பினால் அல்லாஹ் விடமே கேட்பீராக!, 
நீர் உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடுவீராக!
முழு சமுதாயமும் ஒன்றுசேர்ந்து உமக்கு நன்மை செய்ய நாடினாலும் அல்லாஹ் உனக்கு எதை (நிர்ணயித்து) எழுதி வைத்து விட்டானோ அதைத் தவிர (கூடுதலாக வேறு) எந்த நன்மையையும் அவர்கள் உமக்குச் செய்துவிட முடியாது

அனைவரும் ஒன்று சேர்ந்து உனக்கு தீங்கு விளைவிக்க நாடினாலும் அல்லாஹ் உனக்கு எதை (நிர்ணயித்து) எழுதி வைத்து விட்டானோ அதைத் தவிர (கூடுதலாக வேறு) எந்த தீங்கையும் அவர்கள் உமக்குச் செய்துவிட முடியாது

(விதியை எழுதும்) எழுது கோல்கள் (விதிகளை எழுதி முடித்த பின்) உயர்த்தப்பட்டுவிட்டன
(விதிகள் எழுதப்பட்ட) ஏடுகளின் மை காய்ந்து விட்டது (விதியில் எழுதப்பட்ட முடிவுகளில் சிறிதளவும் மாற்றம் செய்ய முடியாது) என்பதை அறிந்து கொள்வீராக! என்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்

                    நூல்  திர்மிதி


    நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                         26-7-2025

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்