Ai நுண்ணறிவு தொழில் நுட்பம்
A i செயற்கை நுண்ணறிவு
தொழில் நுட்பம்
*******************
அறிவியல் வளர்ச்சியின் தற்போதைய உச்சம்
Ai தொழில் நுட்பம் ( செயற்கை நுண்ணறிவு)
தொழில் நுட்பம்
அறிவியல் வளர்ச்சி எந்தளவுக்கு முன்னேற்றம் அடைகிறதோ அந்தளவுக்கு மனித சமூகத்தின் சிந்தனையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்பதே பகுத்தறிவு கூறும் முடிவு
ஆனால் நடைமுறையில் அறிவியல் வளர்ச்சி
மனித சமூகத்தின் மூளையை முரண்படச்செய்கிறது மங்கச்செய்கிறது வழிகேடுகளை நோக்கி பாயச்செல்கிறது என்பதே நடைமுறை
குறிப்பாக சமூகவலைத்தளத்தில் காணும்
A i தொழில் நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை உண்மை என்று கருதி பரப்புவோரும் அதற்கு சுபுஹானல்லாஹ் அல்லாஹீ அக்பர் என்று பொய்களுக்கு இறைவனை துதிப்போரும் ஏராளம் உண்டு
சிந்தனைக்கு முதலிடம் தராது தனது
அலங்காரத்திற்கு முதலிடம் கொடுத்து தனது புகைப்படங்களை பரவவிட்டு அதன் மூலம் தங்களை ஆபாச நடிகைகளாக சித்தரிக்கப்பட்டு அவமானப்பட்டு நிற்கும் பெண்கள் ஏராளம் உண்டு
ஒரு உண்மையை விவரிக்கும்
வீடியோ பதிவில் பல பொய்யான காட்சிகள் சித்தரிக்கப்பட்டு பரப்பப்படுவதே ஏராளம்
செயற்கை தொழில் நுட்பம் மூலம் ஒரு பொய்யை உண்மை போல் சித்தரிக்க முடியும் என்பதைப்போலவே ஒரு உண்மையை பொய்யை போலவும் Ai நுண்ணறிவு மூலம் திசை
திருப்ப இயலும்
தவறுகளை செய்து சிக்கிக்கொண்டவன்
தனது தவறை மூடி மறைக்க செயற்கை தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தவும் இயலும்
எதுவாக இருப்பினும் வருங்காலத்தில் மூளையை சரியாக பயன்படுத்தும் மக்களை தவிர வேறு எவரும் சரியான ஒன்றை தீர்மானிக்க இயலாது
இறைவன் வழங்கிய பகுத்தறிவை சரியாக பயன்படுத்துவதை விட உயரிய தொழில் நுட்பம் எதையும் அறிவியல் துணையால் உருவாக்க இயலாது என்பதே நிதர்சனமான உண்மை
அறிவியல் பெருமுதிர்ச்சி பெற்றாலும் அதன் பின்னனியில் மனிதனின் கண்காணிப்பு ஏதோ ஒரு வகையில் இல்லாது செயல்படாது
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
31-7-2025
Comments
Post a Comment