கல்விக்கு இப்படி உதவுவது எளிது
சமூக கல்விக்கு இப்படி
உதவுவதே எளிதானது
****************************
கல்வியில் ஆர்வம் இருக்கும் அளவுக்கு
முஸ்லிம் சமூகத்தில் தனது பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கும் அளவு அநேகருக்கு வசதி இல்லை என்பதை அனைவரும் அறிந்துள்ளோம்
சமூக இயக்கங்களும் அமைப்புகளும் வருடம் ஒரு முறை மாணாக்கள் எந்த கல்வியை தேர்வு செய்யலாம் என்று மட்டும் விளம்பரம் செய்து நிகழ்ச்சிகளை தவறாது நடத்துகிறார்களே தவிர சமூகத்தில் நடுத்தரமக்களின் கல்விக்கு நேரடியாக உதவி செய்யும் நிலையில் பெரும்பாலும் இல்லை
கல்வியில் ஆர்வத்துடன் இருக்கும் நடுத்தர மாணாக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று பொதுவாக அறிக்கை போடுவதும்
அதற்காக பிறரிடம் பரிந்துரைப்பதும் சுயமரியாதைக்கு இழுக்காகவும் தன்மானத்திற்கு அவமானமாகவும் இயல்பாகவே தோன்றுகிறது
கல்வியின் பெயரில் சில கள்ளத்தனங்களும் நடப்பதால் உதவிடுவோருக்கும் நம்பிக்கை பெரும்பாலும் ஏற்படுவது இல்லை
ஆனால் இவ்விசயத்திலும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்பட்டால் நிச்சயம் முஸ்லிம் சமூகத்தையும் கல்வியில் விரைவில் முன்னேற்றம் செய்ய இயலும்
முஸ்லிம் சமூகத்தில் கல்வியில் ஆர்வத்துடன் இருக்கும் பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்க இயலாத ஒருவரின் ஒரு வருட கல்லூரி செலவை
( தோராயமாக ஒரு இலட்சம் தொகையை ) ஒருவரே பொருப்பேற்று கொள்வது சிரமமானது
அவ்வாறு பொருப்பேற்று கொண்டாலும்
ஒரு மாணவனின் நான்கு வருட கல்லூரி செலவுக்கு முற்கூட்டியே உத்திரவாதம் கொடுக்க இயலாது
ஆனால் ஒரு மாணவனின்
ஒரு வருட படிப்புக்கான கல்லூரி செலவை மட்டும் சமூகத்தில் தானதர்ம சிந்தனையுடைய இருபது நபர்கள் இறைவனின் திருப்திக்காக ஒன்றிணைந்து வருடம் 5000 ரூபாய என்ற அளவில் மாணவன் படிக்கும் கல்லூரி கணக்கில் நேரடியாக அனுப்பி உதவி செய்தால் நான்கு வருடத்தில் முஸ்லிம் சமூகத்தில் ஒருவரை பட்டம் வாங்கிய கல்வியாளராக மாற்றிட இயலும்
உதவுபவர்களுக்கு இது நம்பகமானதாகவும் வருடத்திற்கு ஒரு முறை 5000 என்ற கணக்கில் உதவுவதற்கு எளிமையானதாகவும் நிச்சயம் இருக்கும்
நிலையான தானதர்மங்களில் கல்வியும் ஒன்று என்பதை உணர்ந்து ஒவ்வொரு பகுதியிலும்
தர்ம சிந்தனையுடையவர்கள் இருபது நபர்கள் இணைந்தால் அவர்களின் மறுமை வாழ்வுக்கும் இம்முயற்சி நிச்சயம் பயன் தரும்
முஸ்லிம் சமூகத்திலும் நிச்சயமாக கல்வியில்
முன்னேற்றம் ஏற்படும் இன்ஷா அல்லாஹ்
கல்விக்காக விளம்பரம் செய்யாது உதவும் மக்களும் அரிதாக உள்ளனர் என்பதையும் மறுக்க இயலாது
நமது சுயஅனுபவத்தை கட்டுரை வடிவமாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்
இவ்விசயத்தில் உங்கள் கருத்துக்களை
ஆதரவையும் பதிக்கலாம்
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
13-5-2025
Comments
Post a Comment