விதவை
இறைவனின் பரிவை பெற்று தரும் விதவைகள் ---------------------------------- J . யாஸீன் இம்தாதி ************* விதவை குறுக்கே வந்தால் காரியம் உருப்படுமா ? விதவை முகத்தில் முழித்தால் இந்நாள் நன்றாக இருக்குமா ? விதவை கனவில் வந்தால் என்ன நடக்கும் ? விதவை பட்டு புடவை உடுத்துவது சரியா ? என்ற அறிவீன ஆராய்சியில் இறங்கிய ஆண் சமூகம் விதவையாக்கப்பட்ட பெண்ணிண் மறுவாழ்வுக்கும் எதிர்காலத்திற்கும் சமூக ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதே இல்லை திருமண வாழ்வை அடைய வழி இல்லாதவர்களை விட திருமணம் முடிந்து சில வருடங்களில் கணவனை இழந்தவர்களே அதிகமான மன வலியை சமூக சிக்கல்களை சுமக்கின்றார்கள் கை குழந்தையுடன் கைம்பெண் நிலையில் இருந்தால் அவர்கள் அடையும் சோதனைகள் ஏராளம் தட்சணை பெயரில் முதல் திருமணத்திற்கே பல நெருக்கடிகளை கொடுத்த நம் சமுதாயம் கணவனை இழந்த நிலையில் தனது இரண்டாம் திருமண வாழ்வுக்கு ஏற்பாடு செய்து தர வழிவகை செய்யப்போகிறார்களா ? என்று நம்பிக்கையிழந்து நெடுங்காலம் ஓடி விட்டது இளமையும் எழிலும் இருந்தால் இலவசமாக ச