மரணம்
!! மரணம் அபசகுணமா !!
கட்டுரை எண் 1143
••••••••••••••••
J . யாஸீன் இம்தாதி
************
குடும்ப தலைவன் அடிக்கடி வீட்டில் நினைவூட்ட வேண்டிய செய்தியாக இருக்க வேண்டியது மரணம் தொடர்பான அறிவுரையாக இருக்க வேண்டும்
மரணத்தை பற்றி பேசுவதையே அபசகுணமாக கருதும் அளவு மனிதனின் மனோ நிலை
உலக வாழ்வில் மூழ்கி விட்டது
மனிதன் உழைப்பிற்கு செலுத்தும் நேரமும் வாழ்வதற்கு எழுப்பும் கட்டிடங்களும் உலக வாழ்வே நிலையானது என்ற எண்ணத்தையே வெளிப்படுத்தி காட்டுகிறது
வாழும் வரை ஜாலியாக வாழ வேண்டும் என்று எண்ணுகிறார்களே தவிர மரணத்திற்கு மறுநிமிடம் தனது நிலை என்ன என்பதை கற்பனையில் கூட நினைத்து பார்க்க நேரம் ஒதுக்குவது இல்லை
அதன் விளைவே குடும்ப தலைவனோ தலைவியோ இறந்து விட்டால் வாழ்வே நாசமாகி விட்டதாக கருதி புலம்பும் அவல நிலை தொடர்கிறது
ஒருவரின் வாழ்நாளை வைத்து பிறரின் வாழ்கையை கடத்தி செல்லும் விதம் இறைவன் யாரையும் படைக்கவில்லை
ஒரு சில மாதங்களில் எவரும் சுய காலில் நிற்கும் அளவு இறைவன் சூழ்நிலையை ஏற்படுத்தியே எந்த இழப்பையும் மனிதனுக்கு ஏற்படுத்துகிறான்
இதுவே நடைமுறை தரும் பாடம்
நான் மரணித்து விட்டாலும்
நீ முடங்கி விடாதே
பிள்ளைகளிடம் எனது மரணத்தை பேசியே அவர்களின் மனோபலத்தை குறைத்து விடாதே
மறுமணம் புரியும் சூழ்நிலை அமைந்தால் எவ்வித உருத்தலும் வெறுத்தலும் இல்லாமல் மணமுடித்து கொள்
இறைவனின் நாட்டம் இன்றி எதுவும் நடந்து விடாது என்ற உளவியல் போதனைகளை குடும்ப தலைவனும் தலைவியும் அடிக்கடி பரிமாறி கொள்ள வேண்டும்
பிள்ளைகளுக்கான எதிர்கால ஆலோசனைகளை கூறுவதுடன் அவர்களுக்கும் இந்த உளவியல் உண்மையை புரிய வைக்க வேண்டும்
இந்நிலையில் உபதேசிக்கப்பட்டு வாழும் குடும்பம் எந்நிலையிலும் உளவியல் ரீதியாக பாதிப்படைய மாட்டார்கள்
இறைவனை முறையாக நம்பி மரணத்திற்கு பின்னாலும் ஒரு வாழ்கை இருக்கிறது என்ற ஆன்மீக நம்பிக்கை உடைய மக்களுக்கு எந்த இழப்பும் வாழ்வில் தளர்ச்சி சோர்வை ஏற்படுத்தியது இல்லை
சரியான ஆன்மீகத்தை குப்பையில் வீசி பகுத்தறிவை மாத்திரம் கடவுளாக கருதும் நாத்தீகனுக்கே
இழப்புகள் ஏற்படும் போது ஆறுதல் பெற மாற்று வழிகள் இருக்காது
இதுவே வாழ்வியல் தத்துவம்
நம் பிறப்பை பெற்றோர்கள் தீர்மானிப்பதும் இல்லை
நம் இறப்பை நாமே தீர்மானிப்பதும் இல்லை
உங்கள் பிறப்பிற்கும்
இரு வருடம் முன்பு
நீங்கள் எங்கு இருந்தீர்கள் ?
எதுவாக இருந்தீர்கள் ?
எப்படி இருந்தீர்கள் ?
என்று சிந்தித்தால் அங்கு நம்மை படைத்த இறைவனின் ஆற்றல் புரியும்
كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ ثُمَّ اِلَيْنَا تُرْجَعُوْنَ
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்
(அல்குர்ஆன் : 29:57)
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَۙ
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது
(அல்குர்ஆன் : 56:60)
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment