சுருக்கப்படும் மார்க்க கல்வி
சுருக்கப்படும் மார்க்க கல்வியும்
ஜமாஅத்துல் உலமா சபையின்
மவுனமும்
********************************
25-10-2022
J. யாஸீன் இம்தாதி
******************
ஒரு வருடத்தில் டாக்டர் பட்டம் வேண்டுமா
ஒரு வருடத்தில் இன்ஜினியர்
பட்டம் வேண்டுமா
என்று அந்த துறை சார்ந்த யாரும் அறிவிப்புகளை வெளியிடுவது இல்லை
காரணம் கற்று கொடுக்க வேண்டிய கல்வியின் பாடத்தையும் அதன் காலத்தையும் சுருக்கினால்
டாக்டர் எனும் பட்டமும்
இன்ஜினியர் எனும் பட்டமும் தான் அதிகரிக்குமே தவிர
நடைமுறையில் சமூகத்திற்கு பயன்படும் விதம் முறையான டாக்டர்களையும் இன்ஜினியர்களையும் உருவாக்க இயலாது என்பதை தெளிவாகவே அறிந்துள்ளனர்
ஆனால் இந்த ஆரோக்யமான சிந்தனையும் வடிவமைப்பும்
உலமா பட்டத்திற்கு மாத்திரம் இல்லை என்பதை போல் சிலரின் அறிக்கைகளை படிப்பதற்கே வேடிக்கையாக உள்ளது
ஒரு வருடத்தில் ஆலீம் பட்டம் வேண்டுமா
ஆறு மாதத்தில் ஆலீமா பட்டம் வேண்டுமா என்ற விளம்பரங்களை அடிக்கடி காண முடிகிறது
ஏழு வருடம் பத்து வருடம்
தனது முழு நேரத்தையும் காலத்தையும் ஒதுக்கி ஆலிம் பட்டம் பெற்றவர்களில் பலருக்கே மார்க்கம் தொடர்பான ஆய்வு நிறைவாக இல்லாத சூழலில் மார்க்க கல்வியின் அடிப்படை காலத்தை குறைத்து அறிவிப்பு தருவது எதற்காக ?
அவ்வாறு பட்டம் பெற்றவர்களால்
எந்த விசயத்தில் முஸ்லிம் சமுதாயம் நிறைவை பெற்றுள்ளது ?
என்பதை அவர்களால் புள்ளி விபரத்துடன் விளக்கம் தர இயலுமா ?
மூன்று வருடம் இஸ்லாமிய கல்லூரிகளில் படித்து ஆலீமா பட்டம் பெற்றவர்களில் பலருக்கே
மார்க்க ஞானம் குறைவாக இருப்பதை சாதாரணமாக காண முடிகிறது
இந்நிலையில் ஆறு மாதத்தில்
ஒரு வருடத்தில் ஆலீமா பட்டம் கொடுப்பதாக அறிவிப்புகளை வெளியிடுவது பெண்களின் திருமண நேரத்தில் பத்திரிக்கையில்
ஆலீமா என்று அச்சு பதித்து கவுரவம் பெறுவதற்கு உதவுமே தவிர சமூகத்திற்கும் அவரை சார்ந்த குடும்பத்திற்கும் கூட நிறைவான இஸ்லாமிய ஞானத்தை பெற்று தராது
முஸ்லிம்களின் மார்க்க ஆர்வமின்மையை கருத்தில் கொண்டு இஸ்லாமிய கல்லூரி படிப்பு முறை மற்றும் காலத்தை சுறுக்குவதை தவிர்த்து விட்டு நடைமுறையில் இருக்கும் இஸ்லாமிய பாட திட்டத்தையும் அதன் அமைப்பையும் சீர் செய்ய முற்படுங்கள்
குறிப்பாக ஜமாஅத்துல் உலமா சபை இது போன்ற விசயங்களை கண்டும் காணாது போல் செயல்படுவது கண்டிக்க தக்கது
அதன் விளைவே தற்போது
நான்கு விசயங்களை கேள்விபடுவோரும் மேலோட்டமாக குர்ஆன் ஹதீசை மேய்வோரும் முஃப்திகளாக தங்களை கருதி கொண்டு ஹதீஸ்கலை வல்லுனர்களையும் ஆய்வுகள் தொடர்பான நூற்களையும் சமூகவலைதளங்களில் வரம்பு மீறி விமர்சிக்கும் அவலம் தொடர்கிறது
ஏற்கனவே உலமாக்கள் சமுதாயத்தில் எதிர் கொள்ளும் இன்னல்களையும் நிர்வாகிகள் ரீதியாக வாழ்வில் சந்தித்து வரும் சிரமங்களையும் ஜமாஅத்துல் உலமா சபையின் கவனமின்மையையும் சுட்டி காட்டி
பல கட்டுரை பதிவுகள் வீடியோ பதிவுகளையும் வெளியிட்டுள்ளோம்
இவ்வகையில் நாம் குறிப்பிடும் செய்திகள் நியாயமானவை என்பதை அறிந்தும் பல ஆலீம்கள் கோழைத்தனமாக மவுனமாக இருப்பது வேதனையாக உள்ளது
فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ وَلَا تَعْجَلْ بِالْقُرْاٰنِ مِنْ قَبْلِ اَنْ يُّقْضٰٓى اِلَيْكَ وَحْيُهٗ وَقُلْ رَّبِّ زِدْنِىْ عِلْمًا
ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்
இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!
என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!
(அல்குர்ஆன் : 20:114)
وَمِنَ النَّاسِ مَنْ يُّجَادِلُ فِى اللّٰهِ بِغَيْرِ عِلْمٍ وَّلَا هُدًى وَلَا كِتٰبٍ مُّنِيْرٍ ۙ
இன்னும்: கல்வி ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 22:8)
உலமா தொடர்பான பதிவுகளை பார்வையிட நம்
IMTHI ONLINE YOUTUBE
சானலில் ஜமாஅத்துல் உலமா சபை எனும் தலைப்பில் காணவும்
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment