கேள்விகளின் இலக்கணம்
வாட்சப் மார்க்க கேள்வி ?
மார்க்கம் அறிந்தவர்களும் அழைப்பாளர்களும் மார்க்கத்திற்கு விரோதமான காரியங்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடுகிறார்கள்
அது போன்றோருக்காக பல அறிவுரை பதிவுகளை வெளியிட்டால் நன்றாக இருக்குமே ?
என்று சிலர் அனுப்பி வைத்துள்ள கேள்விக்கு அளித்த பதிலே இது
*************************
சத்தியத்தை அசத்தியமாக புரிந்தவர்களுக்கு விளக்கம் தருவதும் போதனை செய்வதும் பயன் தரும்
அசத்தியம் என்று தெரிந்தும் அப்பாதையில் நீடிப்போருக்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக சத்திய பாதையில் இருந்து பிரிந்தோருக்கும் அவரை நன்றாக அறிந்தோர் முறையாக தனிப்பட்டு ஆதங்கத்தையும் கண்டனத்தையும் நாகரீகமாக பதிவு செய்வதை தாண்டி எந்த படிப்பினையும் பயன் தராது
அது போன்றோருக்காக நம் நேரத்தை பயன்படுத்தி கட்டுரை எழுதுவது அறிக்கைகளை வெளியிடுவது பயான் செய்வதை விட
நம் சிந்தனைக்கு ஊக்கம் தரும்
புதுமையான கேள்விகள்
பொது அறிவு வசயங்கள்
அறிவியல் சார்ந்த விசயங்களில் கவனம் செலுத்துவதே சாலச் சிறப்பு
பிற இயக்கங்களின் வளர்சிக்கு பாடுபடுதல் தளர்சிக்கு முயற்சித்தல் தனி மனித துதி பாடல் வசை பாடல்
தனி மனித தூய்மைக்கு விளக்கம் சொல்லி திரியுதல் போன்ற எதிலும் கவனம் செலுத்துவது
நம்மை விமர்சனம் செய்பவராக மாத்திரமே மாற்றி விடும்
நாம் வெளிப்படுத்தும் நல்ல கருத்துக்களை பிற மக்கள் அங்கீகரித்தாலும் குறை கூறினாலும் அதை கருத்தில் கொள்ளாது நம்மால் இயன்ற பணிகளை மக்களை நேரடியாக சந்தித்தும் நவீன டெக்னாலஜியை பயன் படுத்தியும் இயன்றவரை செய்வதே மறுமை வெற்றிக்கு பயன் தரும்
அவ்வகையில் தான் நம் மார்க்க பணியும் சுய வேலைகளை செய்து கொண்டே இந்நாள் வரை தொடர்கிறது இனியும் தொடரும் இன்ஷா அல்லாஹ்
உங்களை சுற்றி இருப்போர் பக்கம் உங்கள் கண்கள் செல்வதால்
சில குறைகளை காணுகிறீர்கள்
அதே கண்களை சுற்று பக்கம் திருப்பினால் தினமும் இது போன்றோரை வரிசையாக காண முடியும் கேள்வி பட முடியும்
அவர்களை கருத்தில் கொண்டே வாழ்நாள் முழுவதும் விளக்கம் சொல்லி திரியும் நிலை ஏற்படும்
இது நம் வேலையும் அல்ல
மார்க்கம் கற்று தரும் வழிமுறையும் அல்ல
அதில் இருந்து விலகி கொள்வதே சிறப்பு
فَاِنْ اَعْرَضُوْا فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًا اِنْ عَلَيْكَ اِلَّا الْبَلٰغُ
எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்
(அல்குர்ஆன் : 42:48)
நட்புடன் J யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment