விதவை

            இறைவனின் பரிவை 
        பெற்று தரும் விதவைகள்
             ----------------------------------
             J . யாஸீன் இம்தாதி
                   *************
விதவை குறுக்கே வந்தால் 
காரியம் உருப்படுமா ?
விதவை முகத்தில் முழித்தால் 
இந்நாள் நன்றாக இருக்குமா ?
விதவை கனவில் வந்தால் 
என்ன நடக்கும் ?
விதவை பட்டு புடவை உடுத்துவது சரியா  ?


என்ற அறிவீன ஆராய்சியில் இறங்கிய ஆண் சமூகம்  விதவையாக்கப்பட்ட பெண்ணிண்  மறுவாழ்வுக்கும் எதிர்காலத்திற்கும் சமூக ரீதியாக  என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதே இல்லை 

திருமண வாழ்வை அடைய 
வழி இல்லாதவர்களை விட 
திருமணம் முடிந்து சில வருடங்களில் கணவனை இழந்தவர்களே அதிகமான மன வலியை சமூக சிக்கல்களை சுமக்கின்றார்கள் 

கை குழந்தையுடன் கைம்பெண் நிலையில் இருந்தால் அவர்கள் அடையும் சோதனைகள் ஏராளம்

தட்சணை பெயரில் முதல் திருமணத்திற்கே பல நெருக்கடிகளை கொடுத்த நம் சமுதாயம் 
கணவனை இழந்த நிலையில்
தனது இரண்டாம் திருமண வாழ்வுக்கு ஏற்பாடு செய்து தர வழிவகை செய்யப்போகிறார்களா  ? என்று நம்பிக்கையிழந்து நெடுங்காலம் ஓடி விட்டது 

இளமையும் எழிலும் இருந்தால் இலவசமாக சிக்குவாளா என்ற எதிர்பார்ப்பே காமுகர்களின் கண்களுக்கும் சிந்தனைக்கும் எப்போதும் தோணுகிறது

மணமும் புரியாமல் ஊரும் அறியாமல் அந்தரங்கத்தில் அரவணைப்பதாக ஆசை வார்த்தைகளை அடுக்கிச் சொல்லி சில நாட்களில் கழட்டி விட்டு உத்தமர்களாக திரியும் ஏமாற்று பேர்வழிகளே விதவைகளை சுற்றி திரிகின்றனர்

இயலாத சூழலில் இது போன்றோரிடம் சிக்கி சின்னாபின்னமாய் போன விதவைகள் பலர் உண்டு
பிற மனிதனின் சுயநலம் அறிந்து தன்னை தற்காத்து கொண்டு வாழும் பெண்களும் விதவைகளில் 
சிலர் உண்டு 

விதவைகளின் மறு  வாழ்வுக்கு முயற்சி செய்பவரும் அறப்போராளி என்று வர்ணித்தார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

தனது வாழ்வில் மணம்புரிந்த பெண்களை கூட விதவை நிலையில் இருப்போரையே சட்டப்பூர்வமாக தேர்வு செய்து விதவைகளுக்கு வாழ்வு தரும் மக்களுக்கும் எடுத்து காட்டாக விளங்கியவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 


எந்த சமுதாயத்தை விடவும் முஸ்லிம் சமுதாயம் விதவைகளின் விசயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்

விதவைகளுக்காக பரிவு காட்டுவது இறைவனின் அன்பையும்  பரிவையும்  தனது பக்கம் எளிதாக திருப்புவதற்குரிய அழகிய செயல் என்பதை ஆண் சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும்




عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ: قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم: "كافل الْيَتِيم لَهُ أَو لغيره، أَنا وَهُوَ كهاتين فِي الْجنَّة"، وَأَشَارَ الرَّاوِي بالسبابة وَالْوُسْطَى. رَوَاهُ مُسلم.

கவனிக்கப்படாமல் (அனாதை விதவை ஏழ்மை நிலையில்)  இருப்பவர்களுக்கு பொறுப்பேற்று கொள்பவரும் நானும் சுவனத்தில் நெருக்கமாக இருப்போம் என்று நபிகள் நாயகம் சொன்னார்கள்


عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ، عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ: "السَّاعِي على الأرملة والمسكين كالمجاهد فِي سَبِيل الله"، وَأَحْسبهُ قَالَ: "وكالقائم لَا يفتر، وكالصائم لَا يفْطر". أخرجه البُخَارِيّ

விதவை வாழ்வுக்கு உதவுபவரும் ஏழைக்கு உதவுபவரும் அறப்போராளிகள் ஆவர்
தொடர் நோன்பு பிடிக்கும் நன்மைகளையும் தொடர்ந்து வணங்கிய நன்மைகளையும் ( இறைவனிடம்)  பெறுவார் என நபிகள் நாயகம் சொன்னார்கள் 

             நட்புடன்   J . இம்தாதி


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்