மீலாது விழா சிறப்பு செய்தி
மீலாது விழா சிறப்பு செய்தி
*****************
J . யாஸீன் இம்தாதி
**************
கட்டுரை எண் 1442
===========
நீங்கள் மீலாது விழாவை இஸ்லாத்தின் கொள்கையாக கருதி கொண்டாடும் நபர்களில் ஒருவரா ?
மீலாது விழாவுக்கு உடன்படாதவரை மார்க்கத்திற்கு எதிரானவர் என்று விமர்சிக்கும் நபர்களில் ஒருவரா ?
அப்படியானால் என்னுள் எழுந்துள்ள சிறு சந்தேகத்திற்கு ஆவேசம் கொள்ளாது உங்களால் நேர்மையாக பதில் தர இயலுமா ?
உங்கள் பதில் என் சிந்தனையை செதுக்கும் பித்அத் எனும் விமர்சனத்தை இனி தடுக்கும்
இஸ்லாமிய சமூகம் அறிந்து வைத்துள்ள
இமாம் ஷாஃபி (ரஹ்)
இமாம் ஹனபி (ரஹ்)
இமாம் ஹன்பலி (ரஹ்)
இமாம் மாலிக் (ரஹ்)
இமாம் அவ்ஜாயி ( ரஹ்)
இமாம் புகாரி (ரஹ்)
இமாம் கஜ்ஜாலி (ரஹ்)
இவர்களில் யாராவது ஒருவர்
மீலாது விழாவை ஆயுளில் ஒரு முறையேனும் கொண்டாடி உள்ளார்களா
அல்லது பிறர் கொண்டாட ஆர்வம் ஊட்டி உள்ளார்களா ?
மகான் அப்துல்காதர் ஜெய்லானி(ரஹ்)
மகான் ஷாகுல் ஹமீது பாதுஷா (ரஹ்)
போன்றவர்களில் ஒருவராவது தற்காலத்தில் நடைமுறையில் இருக்கும் மீலாது விழாவை வாழ்நாளில் ஒரு முறையேனும் கொண்டாடினார்களா ? அல்லது கொண்டாடுமாறு மக்களுக்கு உபதேசம் செய்தார்களா ?
அல்லது இஸ்லாமிய சமூகத்திற்கு பல சட்டங்களை வெளிப்படுத்துவதாக கருதும் மத்ஹப் கிதாபுகளில் மீலாது விழாவை கொண்டுமாறு வழிகாட்டல் பதிய வைக்கப்பட்டுள்ளதா ?
குர்ஆன் ஹதீஸ் பார்வையில் மீலாது விழாவை பற்றிய தீர்வு என்ன என்பதை தனிப்பட்ட நிலையில் நான் சுயமாக அறிந்து வைத்திருப்பதால் அதை பற்றிய கேள்வியை இப்பதிவில் யாரிடமும் கேட்க விரும்பவில்லை
உங்கள் பின்னூட்டம் இன்ஷா அல்லாஹ் உங்களை தெளிவை வெளிப்படுத்தும்
அல்லது உங்கள் அறியாமையை பிறர் உணர வைக்கும்
اَمْ لَهُمْ شُرَكٰٓؤُا شَرَعُوْا لَهُمْ مِّنَ الدِّيْنِ مَا لَمْ يَاْذَنْ بِهِ
அல்லது அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை (தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா ?
(அல்குர்ஆன் : 42:21)
***********
மத்ஹப் இமாம்கள் மீலாது விழா பற்றி
சொன்னவைகளில் ஒன்று
على نفس النهج الذي سار عليه المذهب المالكي كان نفس ما قاله المذهب الشافعي بما فيه أنه بدعة ولا يوجد أصل أو دلالة لهذا اليوم بالاحتفال ذكرت في السنة أو في القرآن الكريم، وبالتالي لو وجود إسناد لها يمكن أن يقول أن هذا الأمر مباح.
“الباعث على إنكار البدع والحوادث” (ص23)
இமாம் மாலிக் ( ரஹ்) அவர்கள் கூற்றை போலவே
இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்
மீலாதுன் நபி கொண்டாடுவது அடிப்படை ஆதாரமற்ற பித்அத் என்ற செயலாகும்
குர்ஆன் நபிமொழி சான்றுகளை கொண்டு நிரூபணம் செய்ய இயலாதவையாகும்
பரிமாற்ற சங்கிலி தொடர் இருந்தால் கூட ஓரளவு மீலாது விழாவை ஒப்பு கொள்ள இயலும்
ஆனால் மீலாதுன் நபிக்கு நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் முதல் நடைமுறை சங்கிலி தொடர் ஏதும் இல்லை
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment