பாதையை மாற்றுங்கள் அன்பினிய உலமாக்களே

                   கண்ணியமிகு 
       ஜமாஅத்துல் உலமா சபை
                     பார்வைக்கு
                ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
                J . YASEEN IMDHATHI
                     **************
சமூகத்தில் எந்த அமைப்புக்கும் 
எந்த இயக்கத்திற்கும் இல்லாத 
கண்ணியத்தை இறைவன் வழங்கியிருக்கும் சபையே
ஜமாஅத்துல் உலமா எனும் சபை 

உலமா ஆலிம்   என்ற வார்த்தையே ஜமாஅதுல் உலமா எனும் சபைக்கு  கண்ணியத்தை  தருகிறது

இதில் மாற்று கருத்துக்கு 
இடம் இல்லை 

எந்தளவுக்கு சமூகத்தில் ஜமாஅத்துல் உலமா சபைக்கு அல்லாஹ்  கண்ணியத்தை வழங்கியுள்ளானோ  அந்தளவிற்கு அதன் உறுப்பினர்களாக இருக்கும் உலமாக்களிடம் உளப்பூர்வமான கண்ணியத்தை ஜமாஅத்துல் உலமா சபை  பெற்றுள்ளதா என்பது கேள்விக்குறியே   ?

காரணம் என்ன ?

எந்த ஒரு அமைப்பும் அதன் உறுப்பினர்கள் மீது செலுத்தும் அரவணைப்பின் மூலமே அதிகமான நெருக்கத்தை பெற இயலும்

ஜமாஅத்துல் உலமா சபை 
அதன் உறுப்பினர்களாக இருக்கும் உலமாக்களின் வாழ்வாதாரத்திற்கும் அவர்களின் சந்ததிகளின் உலகியல் படிப்பு முன்னற்றத்திற்கும்  
எது போன்ற திட்டங்களை இதுவரை முன் வைத்துள்ளனர்  ?

குறைந்த பட்சம் உலமாக்கள் சந்தித்து வரும் சிக்கல்களுக்கு ஜமாஅத்துல் உலமா சபை மறுகனமே கைகொடுக்கும் என்ற நம்பிக்கையை  அழுத்தமாக பெற்றுள்ளார்களா  ?

ஒரு பள்ளிவாசலில் இமாமாக பணியாற்றுபவர் தக்க காரணம் இல்லாது நீக்கப்பட்டால் அந்த பள்ளிவாசலுக்கு மாற்று இமாம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து தருவது  தான் ஜமாஅத்துல் உலமா சபையின் அடிப்படை  வேலையா  ?

வருடத்திற்கு மூன்று இமாம்களை 
ஒரு பள்ளியின் நிர்வாகம் வேலை நீக்கம் செய்து விட்டு நான்காவதாகவும் மறு இமாம் கேட்கும் போது அப்பள்ளியின் நிர்வாகத்திடம் இதை பற்றிய கண்டத்தையும் நீக்கப்பட்டதற்கு தகுந்த காரணம் உள்ளதா என்று   ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை கேட்டது உண்டா  ?

இமாமுக்கு  தரப்படுகின்ற ஒரு மாத சம்பளத்தை வைத்து அப்பள்ளியின் நிர்வாகிகளில் ஒருவர் கூட 
தனது குடும்பத்தை நடத்தி செல்ல  இயலாது என்ற நிலையில் 
அதே அளவு குறைந்த சம்பளத்தை குடும்பத்துடன்  தங்கி பணியாற்றும் இமாமுக்கு தருவது எவ்வகையில் நியாயம் என்று ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை பள்ளிவாசல்  நிர்வாகிகளிடம் அழுத்தமாக  கேட்டது உண்டா  ?



தமிழக பள்ளிவாசல்களில் மாதம் 25000 ரூபாய் சம்பளம் பெறும் ஐம்பது இமாம்களை மட்டும்  ஜமாஅத்துல் உலமா சபையினரால் தற்போது அடையாளமிட்டு  காட்ட முடியுமா?

மார்க்கத்திற்கு முரணான பித்அத்துகளை செய்து அதன் மூலமாவது தனது குடும்பத்தின் வறுமையை விரட்ட வேண்டும் என்று பல  உலமாக்கள்  நிர்பந்தத்தில் தள்ளப்பட்டிருப்பதற்கு கூட  ஜமாஅத்துல் சபை இது போன்ற விசயங்களில்  கவனம் செலுத்துவது இல்லை என்பது தானே எதார்த்தம் 

தற்போது பல ஆலீம்கள் பள்ளிவாசல் பணியில் இருந்து விலகி  தொழில் ரீதியாக மாறி வருவதற்கும் ஜமாஅத்துல் உலமா சபையின் அலட்சிய போக்கும்  காரணம் இல்லை என்று சொல்ல இயலுமா ?


ஒரு கல்லூரியின் பொருப்பாளர்கள்  அக்கல்வியை சார்ந்தவர்களாகவும் 
ஒரு துறையின் பொருப்பாளர்கள் அத்துறையை அறிந்தவர்களாகவும் நியமிக்கப்படும் பொழுது 

பள்ளிவாசலின் பொருப்பாளர்களும்
ஆலீம்களை உருவாக்கும் அரபு கல்லூரிகளின் பொருப்பாளர்களும் அநேகம் மார்க்க ஞானம் இல்லாதவர்களாகவே இருந்து வருவதின் பின்புலம் என்ன என்று ஜமாஅத்துல் உலமா சபை  பகிரங்கமாக பேசியது உண்டா ?

ஆலீம்கள் என்றால் பள்ளிவாசல்களில் பணி செய்யும் கூலி தொழிலாளியாக மாத்திரமே இருக்க முடியும் என்ற அவல  நிலையை தந்திரமாக ஏற்படுத்தியது யார் என்று ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை தங்களுக்குள்  ஆலோசித்தது உண்டா  ?

ஆலீம்கள் சத்தியத்தை சொல்வதற்கு மார்க்கம் அறியாத அவாம்களிடம் அனுமதி பெறும் அளவுக்கு உலமாக்களின் நிலையை ஏற்படுத்தி வைத்திருப்பது ஏன் என்ற பொது ஞானத்தை இதுவரை ஏன் ஜமாஅத்துல் உலமா சபை யோசிக்கவில்லை?


ஆலீம்களை பொருப்புகளில் நியமிக்க வேண்டும் என்பதற்காக இதை நான் சுட்டி காட்டவில்லை 

ஆலீம்களை சமுதாய பணியில் இருந்து விரக்தியடைய வைக்க கூடாது என்பதற்காக இவைகளை  சுட்டி காட்டுகிறேன்

ஆலீம்களின் விரக்தியை பயன்படுத்தி ஜும்மா மேடைகளில் மார்க்க அறிவீனர்களின் ஆதிக்கம் பெருகி விட கூடாது என்பதற்காக இவைகளை  சுட்டி காட்டுகிறேன்

ஜமாஅத்துல் உலமா சபை தான் 
நம் உரிமைகளை பாதுகாக்கும் கவசம் என்ற நம்பிக்கை தகர்ந்து ஜமாஅத்துல் உலமா சபையை நம்பி பயன் இல்லை என்ற கீழ்நிலை எண்ணம் உலமாக்களிடம் மேலோங்கி விட கூடாது என்பதற்காக இவைகளை  சுட்டி காட்டுகிறேன் 

இந்திய தேசத்தின் விடுதலை போரில்
பள்ளிவாசல்களை கூட ஆங்கிலேயருக்கு எதிராக செயல் படும் ராணுவ கோட்டையாக மாற்றி அமைத்து  நாட்டு மக்களின் உணர்வை பக்குவப்படுத்திய  வீரமிக்க  ஆலீம்களின் வாரிசுகள் 

தற்போது முஸ்லிம் சமுதாயத்திடம் சத்தியத்தை எடுத்து சொல்வதற்கு கூட தயங்கும் அளவுக்கு 
மீறி சொன்னால் வழிப்போக்கனை போல் ஊர் ஊராக பள்ளிவாசல் தேடி அலையும் அளவுக்கு அவர்களை பலவீனமாக்கி பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் தள்ளி 
ஆலீம்களின் குடும்பத்தையும் மக்களையும் உலமா பணியில் இருந்தே தடம் புரள செய்து விடாதீர்

அதன் விளைவே தற்போது சில அரபுக்கல்லூரிகள் ஓதுவதற்கு ஆள் இல்லாது பட்டம் பெறுவதற்கு ஆள் இல்லாது  பூட்டப்பட்டு வருகிறது 

மேடைகளில் வீரவசனம் பேசி தனக்கு என்று ஒரு ரசிகர்  கூட்டத்தையும் தனது எதிர்காலத்திற்கு தேவையான பொருளாதாரத்தையும் சேர்த்தி வைத்துள்ள எந்த ஆலிமுக்கும் இந்த நிலை புரிய போவது இல்லை 
அவர்கள் குரல் கொடுக்க போவதும் இல்லை 

கண்ணிய மிகு 
ஜமாஅத்துல் உலமா சபை 
இதை கருத்தில் எடுக்குமா  
என்பதை காலமே பதில் சொல்லும்
இன்ஷா அல்லாஹ் !!


                          இப்படிக்கு 
  மர்ஹும் AM ஜலாலுத்தீன் ( பாகவி) 
                            மகனார்
              J . யாஸீன்( இம்தாதி)
                          9994533265

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்