CCTV CAMERA

                       CCTV CAMERA 
                           ********

கண் பார்வை முன் முதலாளி இல்லை என்றாலும் முதலாளி முன்னேற்பாடு செய்த CCTV CAMERA மூலம் எந்நேரமும் கண்காணிப்பு நடைபெறுகிறது என்ற காரணத்தால் தவறுகளில் இருந்து தன்னை  தவிர்த்து கொள்ளும் மனிதன் 

தன்னை படைத்த இறைவன் எந்நேரமும் கண்காணிக்கும் வல்லமை பெறவில்லை என்பதை போல் நடப்பதை  விட அறிவீன செயல் இருக்க இயலாது 

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் 
மின் பாயும் கம்பி துண்டிக்கப்பட்டால் தன்னை அடையாளம் தெரியாத வகையில் மூடி கொண்டால்  CCTV CAMERA பழுதானால் முதலாளிக்கும் கூட கண்டு பிடிக்கும் வாய்ப்பு இல்லை என்று மனிதனின் பலவீனத்தை அறிந்த மனிதன் 
இறைவனின் கண்காணிப்பையும் மனிதனின் கண்டு பிடித்த கருவியை  போன்று கருதினால் அவனை விட சிந்தனை குறைந்தவன் எவனும் இல்லை 

கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் சாதனங்களை கண்டறியப்படும் இறைவனின் படைப்புகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதுவே மனிதனின் அறிவை முடக்கி விடுகிறது
வழிகேட்டின் வாசல்களை திறந்து விடுகிறது 

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ  وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ‏

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்

              (அல்குர்ஆன் : 50:16)

        நட்புடன்    J  . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்