இரட்டை முகம்
இரட்டை முகமுடையான்
♦♦♦♦♦♦♦♦♦
J . YASEEN IMTHADHI
05-12-2021
*******
எங்கும் சாராது
நடுநிலையுடன் சிந்தித்து
செயல்படும் மக்களுக்கு மத்தியில் ஏற்படும் விவகாரங்கள் தீர்வுக்கு வராது இருப்பதற்கு மூல காரணமே
இவ்விரு சாராருக்கும் இடையில் இருக்கும் முனாஃபிக்குகள் ( இரட்டை வேடதாரிகள் தான் காரணம்)
நல்லிணக்கம் பேசுவது போல் வெளிப்படும் அவர்களின் வார்த்தைகளில் விஷமே வியாபித்திருக்கும்
இணைப்பை ஏற்படுத்த இஸ்லாம் அனுமதித்திருக்கும் சில பொய்களையும் விரோதத்தை வளர்த்து
குளிர் காயவே கருதுவார்கள்
குடும்ப விரிசல்களில் குளிர் காயும் இது போன்ற நபர்களை விட சமூக விவகாரங்களில் குளிர் காயும் இரட்டை முகமுடையோரே அதிகம்
இஸ்லாமிய பார்வையில் காஃபிர்களை விட இந்த இரு முகம் உடைய மக்களே கேவலமானவர்கள்
நிரந்தர நரகத்திற்கு உரியவர்கள்
இது போன்றோரை அடையாளம் காணுவது சிந்திப்போருக்கு சுலபமானது
இத்தகையவர்களை அடையாளம் காட்டுவது சமூக மக்களுக்கு நன்மையை
விதைக்கும்
مُّذَبْذَبِيْنَ بَيْنَ ذٰ لِكَ لَاۤ اِلٰى هٰٓؤُلَاۤءِ وَلَاۤ اِلٰى هٰٓؤُلَاۤءِ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِيْلًا
இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை காஃபிர்களின் பக்கமுமில்லை இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்
அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர்
(அல்குர்ஆன் : 4:143)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment