கழிசடை ராமனும் தண்டனையும்
கழிசடை ( கல்யாண) ராமனும்
சமூக கோழைகளும்
***********
கட்டுரை எண் 1399
J . Yaseen imthadhi
Bismillahir Rahmanir Raheem
*****
இஸ்லாமிய ஆட்சியிருக்கும் நிலையில் நபிமார்களை ( இறைதூதர்களை ) இழிவு படுத்தும் அயோக்கியர்களுக்கான ஒரே தண்டனை உச்சபட்சமான
மரண தண்டனை தான்
இதில் மாற்று கருத்து கூறவும் விவாதம் செய்து தெளிவு பெறவும் ஏதும் இல்லை
اِنَّمَا جَزٰٓؤُا الَّذِيْنَ يُحَارِبُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًا اَنْ يُّقَتَّلُوْۤا اَوْ يُصَلَّبُوْۤا اَوْ تُقَطَّعَ اَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ مِّنْ خِلَافٍ اَوْ يُنْفَوْا مِنَ الْاَرْضِ ذٰ لِكَ لَهُمْ خِزْىٌ فِى الدُّنْيَا وَ لَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ ۙ
அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து
பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்
(அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருக்கும் நிலையில்) கொல்லப்படுதல் அல்லது தூக்கிலிடப்படுதல் அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல் அல்லது நாடு கடத்தப்படுதல்
இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்
மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு
(அல்குர்ஆன் : 5:33)
இது இஸ்லாமிய சட்டம் மாத்திரம் அல்ல ஒரு நாட்டில் இருந்து கொண்டு அந்த நாட்டு மக்களுக்கு இடையில் வன்முறையை தூண்டுபவன் பிரிவினைக்கு வித்து போடுபவன் நாட்டிற்கு துரோகம் செய்பவன்
இவர்கள் அனைவரும் அனைத்து நாடுகளின் பார்வையிலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் பல காலமாக தண்டிக்கப்பட்டும் வருகின்றனர்
தற்போது முஸ்லிம்களாகிய நாம் வாழும் இந்திய நாடு
இஸ்லாமிய நாடு அல்ல
அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான அரசியல்சாசனம் கொண்ட நாடு ( மதசார்பற்ற நாடு)
இந்நாட்டில் இறைதூதர்களை அவமதிப்பவனை தூக்கு தண்டனைக்கு உட்படுத்த இயலாது
ஆனால் பிறமதம் சார்ந்தவைகளை இழிவு படுத்துபவனை சிறையில் தள்ள அனைத்து விதமான ஜனநாயக போராட்ட வழிமுறைகளையும் அனுமதித்த நாடு
நிர்பந்தமான சூழலில் முஸ்லிம்கள் தற்போது கழிசடை ராமன் விசயத்தில் இதை தான் கையாள முடியும்
இந்த வழிமுறையை தான் கையாண்டு கொண்டும் உள்ளனர்
இத்தகைய சூழலில் நபிகளாரை இழிவு படுத்திய கழிசடை ராமனை கண்டித்து போராடும் மக்களை உணர்சிக்கு அடிமைபட்ட மக்களாகவும் சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் மக்கள் போன்றும் சிலர்கள் சமூகவலைதளத்தில் வசைபாடி கொண்டும் பொறுமையே அவசியம் என்று கோழைத்தனமாக வெறுமனே அறிக்கைகளை மாத்திரம் வெளியிட்டு கொண்டுள்ளனர்
இத்தகையவர்கள் நம் சமூகம் பிரச்சனைகளை சந்திக்கும் பொழுதெல்லாம் பெரும்பாலும் மறைந்தும் ஒளிந்தும் சாக்கு போக்குகளை கூறியும் தங்கள் கோழைத்தனத்தை நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத அவர்களே நடை முறை படுத்தாத அறிக்கைகளால் மூடி மறைத்து கொள்வர்
சமூகத்தின் போராட்டங்களையும் கொச்சைப்படுத்தும் இவர்கள் அதற்கு மாற்று தீர்வுக்கான வழிமுறைகளையும் சொல்ல தெரியாது வெறுமனே பொறுமை மவுனம் என்ற வார்த்தைகளை மாத்திரம் பரப்பி கொண்டிருப்பர்
நபிகளாரை இழிவு படுத்தி பேசிய கழிசடை ராமனை முஸ்லிம் அல்லாத தலைவர்கள் இந்து சமூகம் சார்ந்த அன்பர்கள் கூட கடுமையாக கண்டித்து அறிக்கை போடும் சூழலில் போராடும் முஸ்லிம்களை குறை கூறுவதே இவர்களுக்கு முக்கிய பணியாக உள்ளது
சுருங்க சொன்னால் இவர்களின் கோழைத்தனத்திற்கு இவர்கள் போட்டு கொண்டே முகமூடியே இந்த நிலைபாடு
தவறை கண்டால் கையால் தடுப்பது வாயால் தடுப்பது
மனதால் வெறுத்து ஒதுங்குவது
என்ற நபிமொழியை இயன்ற வரை செயல்படுத்துவதை தவிர்த்து விட்டு தவறை கண்டு வெறுக்கும் மக்களை கூட வெறுக்கும் கூட்டமே இந்த முகமூடி கூட்டம்
ஒரு வகையில் முஸ்லிம் சமுதாயம் இவர்கள் விசயத்திலும் எச்சரிக்கை பேண வேண்டும்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment