தேமுதிக பிரேமலதா

       வந்தேரிகளின் வழியில்
         தேமுதிக பிரேமலாதா

               *******************
           ♣♦♦♦♦♦♦♣
            J . Yaseen iMthadhi
                   ***************

இந்தியா என்றால் இந்துக்களின் நாடு தான்

இதில் யாருக்கும் மாற்று கருத்துக்கு இடமே  இல்லை என்று மறுக்க முடியாத மாற்று கருத்து உள்ள ஒரு விசயத்தை  தே மு தி க கட்சியின் பிரேமலதா அவர்கள் சமீபத்தில் அக்கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட  பொங்கல் விழா நிகழ்சியில்  அவரது உள்ளத்தில் இருக்கும் விஷத்தை பகிரங்கமாக  வெளிப்படுத்தி உள்ளார்

அவரது கணவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் திரைப்படங்களில் நடிக்கும் காலத்தில் முஸ்லிம் என்றாலே தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் இந்திய நாட்டிற்கு அந்நியப்பட்ட சிந்தனை உடையவர்கள் என்ற நச்சுக்கருத்தை வெளிப்படுத்தியே அவரது திரைப்படத்தின் கதையின் சாராம்சத்தையும் கதாபாத்திரத்தையும் அதிகம்  அமைத்திருந்தார்

தற்போது கணவர் விஜயகாந்த் வழியில் பிரேமலாதாவும் தனது விஷ கருத்தை நடைமுறையில் அரசியல் மேடைகளில்  வெளிப்படுத்தி இருப்பது  நம்மை பொருத்தவரை ஆச்சரியம் இல்லை

இந்திய அரசியல் சாசனத்தில் வகுக்கப்பட்ட மதசார்பற்ற நாடு என்ற வார்த்தையை கூட இது வரை  சரியாக  படித்தது இல்லை என்றே கருத தோணுகிறது

அல்ஹிந்து என்ற அரபுவாசகம் தான் நடைமுறையில் மருவி ஹிந்த் என்றும் இந்த் என்றும் இந்தியா என்றும் மாற்றப்பட்டுள்ளது என்ற சாதாரண வரலாற்றை கூட அறியாதவர்கள் இந்தியாவில் அரசியல்வாதிகளாக இருப்பது கேவலமாக உள்ளது

இந்தியாவில் பூர்வீகமாக வாழும் எந்த முஸ்லிமும் இந்தியாவை இஸ்லாமிய நாடு என்று வாதிடுவது இல்லை

இந்தியாவில் பூர்வீகமாக வாழும் எந்த கிருஸ்தவரும் இந்தியாவை கிருஸ்தவ நாடு என்று வாதிடுவது இல்லை

இந்தியாவில் வாழும் எந்த இந்துவும் இந்தியாவை இந்து நாடு என்று வாதிடுவது இல்லை

இந்தியாவுக்குள் வந்தேரிகளாக வருகை தந்த குறிப்பிட்ட ஒரு சிறு சமூகம் தான் தொடர்ந்து இந்த நச்சு கருத்தை விதைத்து நாட்டின் மதசார்பின்மைக்கு வேட்டு வைத்து வைக்கின்றனர்

அவ்வரிசையில் தேமுதிகவும் தனது பயணத்தை தொடர்ந்து அமைத்தால் ஒட்டு மொத்த மக்களின் அதிருப்தியை பெற்று தரும் அறிவுப்பூர்வமான  ஜனநாயகப்பூர்வமான வழியை கையாளும் சூழல் ஏற்படும் என்பதை நினைவு படுத்துகிறோம்

            நட்புடன் . இந்தியன்
           J . யாஸீன் இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்