ஆன்மீக போலிகள்

           ஆன்மீக போலிகளை
   அம்பலமாக்கும் சுஜித் ஆள்துளை

                🚧 🚧 🚧 🚧 🚧
    27-10-19 J . Yaseen iMthadhi
                    
                **********************   
                       27-10-19
            கட்டுரை எண் 1275
          !!J . Yaseen iMthadhi !!
                    ************* 
                            ﷽
                       !!!!!!!!!!!!!!!!!
குருடனை குணமாக்குவோம்   முடவனை நடக்க வைப்போம் கபோதியை கண் தெரிய வைப்போம் சூனியத்தை அகற்றுவோம் செய்வினைய துரத்தி அடிப்போம்
உங்கள் எதிர் காலத்தை கணித்து  ஜாதகம் கூறுவோம் சூரியனை கூட  சிறிது நேரம்  எங்களுக்காக உதிக்காமல் செய்வோம்

என்றெல்லாம் ஆன்மீகத்தின் பெயரால் நாட்டு மக்களை ஏமாற்றி பித்தலாட்டம் செய்யும் ஒருவனும் கூட

ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை நாங்கள் உயிரோடு மந்திரத்தால் மீட்டு தருவோம்
என்று ஒரு ஆன்மீக போலியும் அறிக்கை தருவதற்கு கூட தயார் இல்லை

அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற அடிச்சுவடும் கூட தற்போது  தெரியவில்லை

காரணம் ஆன்மீகத்தின் பெயரால் மந்திரம் செய்யும் இவர்களில் ஒருவரும் உண்மையாளர்கள் அல்ல

இவர்களின் போலி மந்திரங்களோ தந்திரங்களோ சிறுவன் சுஜித் விசயத்தில் எடுபடாது

பல மடங்கு வலிமை பெற்ற கருவிகளை கொண்டும் கூட இது வரை சிறுவனை அரசாங்கத்தால் கூட மீட்டி எடுக்க முடியவில்லை

அறிவியல் துணை கொண்டே தோல்வியை சந்திக்கும் சூழலில் இது போல் ஆன்மீக திருடர்களை இனியும் மக்கள் அடையாளம் காணாவிட்டால் நிச்சயம் மனித சமுதாயத்தை திருத்த முடியாது

عَنِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: كُنْتُ خَلْفَ النَّبِيِّؐ يَوْماً فَقَالَ: يَا غُلاَمُ! إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ اِحْفَظِ اللّٰهَ يَحْفَظْكَ، اِحْفَظِ اللّٰهَ تَجِدْهُ تُجَاهَكَ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللّٰهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللّٰهِ، وَاعْلَمْ أَنَّ اْلاُمَّةَ لَوِاجْتَمَعَتْ عَلَي أَنْ يَّنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفُعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللّٰهُ لَكَ، وَإِنِ اجْتَمَعُوا عَلَي أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللّٰهُ عَلَيْكَ، رُفِعَتِ اْلاَقْلاَمُ وَجَفَّتِ الصُّحُفُ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
ஒரு முறை நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (ஒரு வாகனத்தில்) அமர்ந்திருந்தேன் “குழந்தாய்! உமக்கு (முக்கியமான) சில விஷயங்களைக் கற்றுத் தருகிறேன்
அல்லாஹ்வின் கட்டளைகளைப் பாதுகாப்பீராக
அவன் உம்மைப் பாதுகாப்பான் அவனது கடமைகளைப் பேணிவந்தால் அவனை உமக்கு முன்னால் பெற்றுக் கொள்வீர்

(அவனுடைய உதவி உமக்கு கிடைத்துக் கொண்டிருக்கும்) ஏதேனும் கேட்க நீர் விரும்பினால் அல்லாஹ் விடமே கேட்பீராக

நீர் உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடுவீராக

முழு சமுதாயமும் ஒன்று சேர்ந்து உமக்கு நன்மை செய்ய நாடினாலும் அல்லாஹ் உமக்கு எதை (நிர்ணயித்து) எழுதி வைத்து விட்டானோ அதைத் தவிர (கூடுதலாக வேறு) எந்த நன்மையையும் அவர்கள் உமக்குச் செய்துவிட முடியாது

அனைவரும் ஒன்று சேர்ந்து உமக்குத் தீங்கு விளைவிக்க நாடினாலும், அல்லாஹ் உமக்கு எதை (நிர்ணயித்து) எழுதி வைத்து விட்டானோ அதைத் தவிர (கூடுதலாக வேறு) எந்த தீங்கையும் அவர்கள் உமக்குச் செய்துவிட முடியாது

(விதியை எழுதும்) எழுது கோல்கள் (விதிகளை எழுதி முடித்த பின்) உயர்த்தப்பட்டுவிட்டன
(விதிகள் எழுதப்பட்ட) ஏடுகளின் மை காய்ந்து விட்டது (விதியில் எழுதப்பட்ட முடிவுகளில் சிறிதளவும் மாற்றம் செய்ய முடியாது) என்பதை அறிந்து கொள்வீராக! என்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்

                நூல்  திர்மிதி

       நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்