நடிகர் சங்க தேர்தல்
நடிகர் சங்க தேர்தலும்
ஊடகங்களின் மடமையும்
************************
23-06-19
J . YASEEN IMDHATHI
******************
ஒவ்வொரு இயக்கம் மற்றும் சங்கங்களுக்கு நிர்வாக தேர்தல் நடைபெறுவது என்பது சாதாரணமான ஒரு விசயம் தான்
ஒரு சங்கத்தில் தேர்தல் நடை பெற்றால் அதை எவரும் ஒரு முக்கிய செய்தியாக தூக்கி சுற்றுவது இல்லை
ஆனால் நடிகர் சங்கத்தின் தேர்தலை மட்டும் ஏதோ தமிழகத்தில் அரசியல் தேர்தல் நடைபெறுவதை போல் பூதாகரமாக்கி ஊடகங்கள் நடிகர் சங்க தேர்தல் செய்திகளுக்கு முக்கியதுவம் கொடுத்து மக்களை மூடனாக்கி வருகிறது
நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றாலும்
நாசர் அணி வெற்றி பெற்றாலும் அதனால் நாட்டு மக்களுக்கு என்ன பலன் ?
தமிழகத்தில் மக்கள் நலனை மையமாக வைத்து நடை பெற்ற பொதுவான ஆர்ப்பாட்டம் போராட்டங்களில் எத்தனை போராட்டங்களில் நடிகர் சங்கத்தின் பங்களிப்பு இதுவரை அமைந்துள்ளது ?
பாமரர்களின் சினிமா மோகத்தின் அறிவிலித்தனமே இது போன்ற செய்திகளை ஊடகங்கள் தூக்கி சுற்றுவதற்க்கு மூல காரணம்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment