Posts

Showing posts from April, 2019

இதை படிச்சீங்களா

  இதை படிச்சீங்களா முதல்லே            ISIS ♦ISIS ♦ISIS ♦           **********************                    30 -04-19            கட்டுரை எண்1247          !!J . Yaseen iMthadhi !!                 **************                  بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ உலகளவில் மனித படுகொலை நடந்து முடியும் ஒவ்வொரு முறையும் இந்த தாக்குதலுக்கு ISIS தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று கொண்டதாக சொல்கிறீர்களே அந்த அமைப்பு தண்ணீர் இல்லாத இடங்களில் ஆழ்துளை போட்டு நாங்கள் மக்கள் தேவையை பூர்த்தி செய்ய போரிங் போட்டு தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்தா  பொறுப்பை  ஏற்கிறான் அல்லது மரம் இல்லாத பகுதிகளில் நாங்கள் மரத்தை நட்டி கொடுத்து பூமியின் வளத்தை பெருக்கி தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்தா  பொறுப்பை ஏற்று கொள்கிறான்  அல்லது விதவைகளுக்கு ஊனமானவர்களுக்கு நாங்கள் மறு வாழ்வை ஏற்படுத்தி தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்தா  பொறுப்பை ஏற்று கொள்கிறான்  மனித கொடூரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பல்லாயிரணக்கில் இரத்த ஆறுகளை ஓட விட்டு அதன் பின் அந்த கொடூரத்திற்க்கு நாங்கள்

மதவாதம் வன்முறை

     காழ்புணர்வை தவிர்பீர்       மனித நேயம் காப்பீர்        *********************** 24-04-19 --J . YASEEN IMDHATHI              *************** திருடன் ரவுடி ஒழுக்கம் கெட்டவன் தருதலை தீவிரவாதி போன்ற காட்டு மிராண்டிகள் எல்லா மதத்திலும் இருப்பார்கள் மதம் சாராத மனிதர்களிலும் சிலர்கள்  இருப்பார்கள் தனி மனிதன் அல்லது தனி இயக்கம் செய்யும் அறிவிலித்தனமான காரியங்களுக்கெல்லாம் அவர்கள் சார்ந்த மதத்தையோ அல்லது இயக்கங்களையோ அல்லது கோட்பாடுகளையோ அல்லது அந்த சமூகத்தையோ  குறை சொன்னால் இவ்வுலகில் எந்த மதமும் எந்த இசமும் எந்த சமுதாயமும் வெறுக்க தக்கதாகவே பார்க்கப்படும் மதங்களை அதன் கொள்கைகளை வைத்து உரசுங்கள்  ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை  செய்யுங்கள் மதவாதிகளை கொடூர மனித மிருகங்களை காரணம் காட்டி மனித நேயத்தை சாகடிக்க முற்படாதீர் காரணம் இவ்வுலகில் ஒரு இந்து இந்து சமூகத்தோடு மட்டும் உறவாடி ஒரு முஸ்லிம் முஸ்லிம் சமூகத்தோடு மட்டும் உறவாடி ஒரு கிருஸ்தவன் கிருஸ்தவ சமூகத்தோடு மட்டும் உறவாடி வாழ முடியாது வியாபாரம் கொடுக்கல் வாங்கல் அனைத்தும் இதர  சமூகங்களோடு ஒட்டி உறவாடுதலின்  மூலமே நடை பெறும் இத

ISIS புரியாத புதிர்

   ISIS அமைப்பு புரியாத புதிரா                Islamic State in           Iraq and the Levant            •••••••••••••••••••••••••• உலகில் தீவிரவாதம் எங்கே நடந்தாலும் உடனே ஊடகங்கள் அதன் பின்னயில் தொடர்பு படுத்தி  போடும் பெயர் ISIS அமைப்பு என்பதாகும் அதுவும் இஸ்லாத்தோடு சம்மந்தப்படுத்தியே ISIS அமைப்பு கயவர்களால் வஞ்சனையோடு  சித்தரிக்கப்பட்டுள்ளது உலகம் முழுவதும் ISIS இயக்கம் ஊடுருவி உள்ளது என்பது உண்மையானால் அந்த ISIS அமைப்பின் தலைமையகம் எந்த நாட்டில் உள்ளது   ? அந்த பயங்கரவாத அமைப்பின் மூத்த  தலைவன் யார் ? அந்த அமைப்பின் கிளைகள் உலகில்  எத்தனை  இடங்களில் உள்ளது ? அந்த கிளைகளை  பொறுப்பேற்று நடத்தும் தீவிரவாதிகள்  யார் ? என்பது உலகில் வாழும் ஒரு முஸ்லிமுக்கும் தெரியாது  ஏன் இவ்வாறு தொடர்ந்து பரப்பி இன்பம் காணும்  ஊடகங்களுக்கும் கூட இதுவரை  தெரியாது இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் தான் ISIS அமைப்பு  செயல் படுகிறது என்பது உண்மையானால் உலகளவில் முஸ்லிம்கள் பல முறை பாதிக்கப்பட்ட  பொழுது கூட அந்த ISIS அமைப்பு ஏன் இதுவரை எதற்காகவும் எந்த நாட்டிலும் குரல் கொடுத்ததாக  ஒரு தகவல

இலங்கை குண்டு வெடிப்பு

   இலங்கை குண்டு வெடிப்பும் இஸ்லாமியர்களின் கடமையும்   ♦♦♦♦♦♦♦♦♦♦                     22-04--19            கட்டுரை எண் 124 5          !!J . Yaseen iMthadhi !!                 **************                  بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ 21 விஞ்ஞான நூற்றாண்டில் வாழும் ஒட்டு மொத்த மனித சமூகமே ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும்  அர்ப்பமான ஒரு ஈ  உயிரை கூட படைக்க முடியாது ஏன் உயிர் பிரியும் தருவாயில் இருக்கும் ஒரு கொசுவின் உயிரை கூட தடுத்து நிறுத்த இயலாது இந்த நிலையில் இருக்கும் மனித சமுதாயம் குற்றங்களுக்கான தண்டனை என்பதை தவிர்த்து வேறு எந்த காரணத்திற்காகவும் ஒரு மனிதனை தண்டிப்பதோ கொலை செய்வதோ கடுகளவும் அனுமதி இல்லாத செயலாகும் பதவி சுகத்திற்காகவும் அரசியலுக்காகவும்  இனத்திற்காகவும் மொழி உணர்வுக்காகவும் படுகொலை செய்வது குண்டு வெடிப்பு நடத்துவது இன்றைய உலகில் மலிவாகி விட்டது குறிப்பாக ஆன்மீகத்தை போதிக்கும் வழிபாட்டு தளங்களில் குண்டு வைத்து அமைதியை விரும்பும் மக்களின்  உயிர்களை கொடூரமாக கொலை செய்வது மன்னிக்கவே இயலாத மாபெறும் குற்றமாகும் இலங

சிந்திக்க சில வரிகள்

       சிந்திக்க சில வரிகள்          ********************                    21-04-19         J . யாஸீன் இம்தாதி                 ************* கொலை செய்யாதே மதுபானம் அருந்தாதே புறம் பேசாதே அநீதம் இழைக்காதே ஒழுங்கீனத்தை பேணாதே விபச்சாரம் புரியாதே பிறர் உரிமைகளை பறிக்காதே ஆணவம் கொள்ளாதே அரசாட்சிக்கு ஆசை படாதே இது போல் இன்னும் பல நூறு  கருத்துக்களை உள்ளடக்கிய இஸ்லாமிய சட்டங்களை உறுதியாக பின் பற்றி முஸ்லிம்கள் நடந்தால்  முஸ்லிம்களுக்கும் நன்மை முஸ்லிம் அல்லாதோருக்கும்  நன்மை தான் இதில் இஸ்லாத்தை கடுமையாக  வெறுப்பதில் யாருக்கு  என்ன நன்மை எவ்விதத்தில் இதில்  நியாயம் உண்டு  ? சிந்தனையாளர்களே சிந்திப்பீர் مَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةً‌  وَلَـنَجْزِيَـنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏  ஆணாயினும் பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம் இன்னும் (மறுமையில்

ஆடவர்களும் தேர்வு முடிவுகளும்

              ஆடவர்களும்         தேர்வு  முடிவுகளும்    ♦♦♦♦♦♦♦♦♦♦                     20-04--19            கட்டுரை எண்1244          !!J . Yaseen iMthadhi !!                 **************                           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                       ★★★★★★★★★★★ பிளஸ் 2 தேர்வு அறிக்கை வெளியிடும் போதெல்லாம் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே முதலிடம் என்ற தகவலே வழக்கமாக வெளியாகிறது இதில் பெண்களின் முன்னேற்றத்தை பார்த்து மகிழும் நாம் தேர்வு நேரங்களின் ஆடவர்களின்  இரண்டாம் நிலைக்கு காரணம் என்ன என்பதை சிந்திப்பது இல்லை உலகளவில் மேதாவிகள் விஞ்ஞானிகள் எழுத்தாளர்கள்  கண்டுபிடிப்பாளர்கள் வரிசையில் ஆண்களின் பட்டியல் தான் மிகவும் அதிகம் இந்தளவு அறிவுத்திறன் பெற்ற ஆண்கள் அர்ப்பமான பிளல் 2 தேர்வில் தொடர்ந்து பின்னடைவை சந்திப்பதற்க்கு என்ன காரணம் ? 1 படிப்பறிவு என்பது மனனம் செய்த தகவல்களை சரியாக  ஒப்புவித்தல் அல்லது எழுத்து வடிவில் வெளிப்படுத்துவதாகும் இந்த தகுதியை பெறுவதற்க்கு சிந்திக்கும் ஆற்றல் தேவை இல்லை மாறாக படித்த செய்திகளை மனனம் செய்யும்  நினைவாற்றலே