ISIS புரியாத புதிர்

   ISIS அமைப்பு புரியாத புதிரா

               Islamic State in
          Iraq and the Levant
           ••••••••••••••••••••••••••

உலகில் தீவிரவாதம் எங்கே நடந்தாலும் உடனே ஊடகங்கள் அதன் பின்னயில் தொடர்பு படுத்தி  போடும் பெயர் ISIS அமைப்பு என்பதாகும்

அதுவும் இஸ்லாத்தோடு சம்மந்தப்படுத்தியே ISIS அமைப்பு கயவர்களால் வஞ்சனையோடு  சித்தரிக்கப்பட்டுள்ளது

உலகம் முழுவதும் ISIS இயக்கம் ஊடுருவி உள்ளது என்பது உண்மையானால்

அந்த ISIS அமைப்பின் தலைமையகம் எந்த நாட்டில் உள்ளது   ?

அந்த பயங்கரவாத அமைப்பின் மூத்த  தலைவன் யார் ?

அந்த அமைப்பின் கிளைகள் உலகில்  எத்தனை  இடங்களில் உள்ளது ? அந்த கிளைகளை  பொறுப்பேற்று நடத்தும் தீவிரவாதிகள்  யார் ?

என்பது உலகில் வாழும் ஒரு முஸ்லிமுக்கும் தெரியாது 

ஏன் இவ்வாறு தொடர்ந்து பரப்பி இன்பம் காணும்  ஊடகங்களுக்கும் கூட இதுவரை  தெரியாது

இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் தான் ISIS அமைப்பு  செயல் படுகிறது என்பது உண்மையானால்

உலகளவில் முஸ்லிம்கள் பல முறை பாதிக்கப்பட்ட  பொழுது கூட அந்த ISIS அமைப்பு ஏன் இதுவரை எதற்காகவும் எந்த நாட்டிலும் குரல் கொடுத்ததாக  ஒரு தகவலும் கூட ஆதாரப்பூர்வமாக  இல்லை

அரசியலுக்காகவும் பணத்திற்காகவும் பல விதங்களில் உலகளவில் படுகொலை செய்யும் மனித அரக்கர்கள் ISIS எனும் சொல்லை தன்னை மறைக்கும் முகமூடியாக மட்டுமே வைத்துள்ளனர் என்பதே உண்மை

இத்தனை வருடங்கள் ISIS அமைப்பு எனும்  வார்த்தையை பயன்படுத்தும் எவரும் எந்த நாடும் ISIS அமைப்பை பற்றி சரியான  அடையாளம் தர மறுக்கிறார்கள் என்றால் இது ஒரு போலியான சித்திரம் என்பது மட்டுமே  தெளிவாக தெரிகிறது

இஸ்லாம் என்ற பதத்திற்கே சாந்தி சமாதானம் என்பதே பொருள்

விரும்புபவர் இஸ்லாத்தை ஏற்கலாம் விரும்பாதவர் இஸ்லாத்தை புறக்கணிக்கலாம் என்று இஸ்லாமே வெளிப்படையாக சொல்லும் போது

தீவிரவாதம் பயங்கரவாதத்தை கொண்டு இஸ்லாத்தை போதிக்க வேண்டிய அவசியமே இல்லை

அது நடைமுறைக்கு சாத்தியமே இல்லை

مِنْ اَجْلِ ذٰ لِكَ ‌ۛ ؔ  كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا  وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ‌ وَلَـقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰ لِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ‏ 
இதன் காரணமாகவே நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்

மேலும், எவரொருவர் ஓரு ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்

      (அல்குர்ஆன் : 5:32)

                     நட்புடன்

   J . ஜே. யாஸீன்  இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்