மதவாதம் வன்முறை
காழ்புணர்வை தவிர்பீர்
மனித நேயம் காப்பீர்
***********************
24-04-19 --J . YASEEN IMDHATHI
***************
திருடன் ரவுடி ஒழுக்கம் கெட்டவன் தருதலை தீவிரவாதி போன்ற காட்டு மிராண்டிகள் எல்லா மதத்திலும் இருப்பார்கள் மதம் சாராத மனிதர்களிலும் சிலர்கள் இருப்பார்கள்
தனி மனிதன் அல்லது தனி இயக்கம் செய்யும் அறிவிலித்தனமான காரியங்களுக்கெல்லாம் அவர்கள் சார்ந்த மதத்தையோ அல்லது இயக்கங்களையோ அல்லது கோட்பாடுகளையோ அல்லது அந்த சமூகத்தையோ குறை சொன்னால்
இவ்வுலகில் எந்த மதமும் எந்த இசமும் எந்த சமுதாயமும் வெறுக்க தக்கதாகவே பார்க்கப்படும்
மதங்களை அதன் கொள்கைகளை வைத்து உரசுங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை செய்யுங்கள்
மதவாதிகளை கொடூர மனித மிருகங்களை காரணம் காட்டி மனித நேயத்தை சாகடிக்க முற்படாதீர்
காரணம் இவ்வுலகில் ஒரு இந்து இந்து சமூகத்தோடு மட்டும் உறவாடி
ஒரு முஸ்லிம் முஸ்லிம் சமூகத்தோடு மட்டும் உறவாடி
ஒரு கிருஸ்தவன் கிருஸ்தவ சமூகத்தோடு மட்டும் உறவாடி
வாழ முடியாது
வியாபாரம் கொடுக்கல் வாங்கல் அனைத்தும் இதர சமூகங்களோடு ஒட்டி உறவாடுதலின் மூலமே நடை பெறும்
இது தான் உலக நியதி
வாழ்வதற்க்கு தான் பிறப்பே தவிர வெட்டு குத்து படுகொலை செய்து சாவதற்க்கு அல்ல பிறப்பு
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ
இறைநம்பிக்கையாளர்களே ! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள்
எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம்
நீதி செய்யுங்கள் இதுவே (தக்வாவுக்கு) -பயபக்திக்கு மிக நெருக்கமாகும்
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 5:8)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment