இலங்கை குண்டு வெடிப்பு

   இலங்கை குண்டு வெடிப்பும்

இஸ்லாமியர்களின் கடமையும்

  ♦♦♦♦♦♦♦♦♦♦

                    22-04--19
           கட்டுரை எண்1245
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

21 விஞ்ஞான நூற்றாண்டில் வாழும் ஒட்டு மொத்த மனித சமூகமே ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும்  அர்ப்பமான ஒரு ஈ  உயிரை கூட படைக்க முடியாது

ஏன் உயிர் பிரியும் தருவாயில் இருக்கும் ஒரு கொசுவின் உயிரை கூட தடுத்து நிறுத்த இயலாது

இந்த நிலையில் இருக்கும் மனித சமுதாயம் குற்றங்களுக்கான தண்டனை என்பதை தவிர்த்து
வேறு எந்த காரணத்திற்காகவும் ஒரு மனிதனை தண்டிப்பதோ கொலை செய்வதோ கடுகளவும் அனுமதி இல்லாத செயலாகும்

பதவி சுகத்திற்காகவும் அரசியலுக்காகவும்  இனத்திற்காகவும் மொழி உணர்வுக்காகவும் படுகொலை செய்வது குண்டு வெடிப்பு நடத்துவது இன்றைய உலகில் மலிவாகி விட்டது

குறிப்பாக ஆன்மீகத்தை போதிக்கும் வழிபாட்டு தளங்களில் குண்டு வைத்து அமைதியை விரும்பும் மக்களின்  உயிர்களை கொடூரமாக கொலை செய்வது மன்னிக்கவே இயலாத மாபெறும் குற்றமாகும்

இலங்கையில் கிருஸ்தவ சமுதாயத்தை குறி வைத்து ஈஸ்டர் தினத்தில்  நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு கோர சம்பவம் இவ்வகையை சார்ந்ததே

பாதிக்கப்படுவது யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கி குரல் கொடுப்பது முஸ்லிம் சமூகத்தின் மார்க்க கடமை என்பதை உணர்ந்து தங்களால் இயன்றளவு குரல் கொடுத்து ரத்ததானங்களை செய்து  வரும்  முஸ்லிம் சமுதாயத்தை ஏக இறைவன் நிச்சயம் விரும்புவான் 

وَمَا لَـكُمْ لَا تُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالْمُسْتَضْعَفِيْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ الَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْ هٰذِهِ الْـقَرْيَةِ الظَّالِمِ اَهْلُهَا‌  وَاجْعَلْ لَّـنَا مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙ وَّاجْعَلْ لَّـنَا مِنْ لَّدُنْكَ نَصِيْرًا ‏ 

பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது?

(அவர்களோ) எங்கள் இறைவனே

அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக

இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள்

       (அல்குர்ஆன் : 4:75)

     நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்