ஆடவர்களும் தேர்வு முடிவுகளும்
ஆடவர்களும்
தேர்வு முடிவுகளும்
♦♦♦♦♦♦♦♦♦♦
20-04--19
கட்டுரை எண்1244
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
பிளஸ் 2 தேர்வு அறிக்கை வெளியிடும் போதெல்லாம் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே முதலிடம் என்ற தகவலே வழக்கமாக வெளியாகிறது
இதில் பெண்களின் முன்னேற்றத்தை பார்த்து மகிழும் நாம் தேர்வு நேரங்களின் ஆடவர்களின் இரண்டாம் நிலைக்கு காரணம் என்ன என்பதை சிந்திப்பது இல்லை
உலகளவில் மேதாவிகள் விஞ்ஞானிகள் எழுத்தாளர்கள் கண்டுபிடிப்பாளர்கள் வரிசையில் ஆண்களின் பட்டியல் தான் மிகவும் அதிகம்
இந்தளவு அறிவுத்திறன் பெற்ற ஆண்கள் அர்ப்பமான பிளல் 2 தேர்வில் தொடர்ந்து பின்னடைவை சந்திப்பதற்க்கு என்ன காரணம் ?
1 படிப்பறிவு என்பது மனனம் செய்த தகவல்களை சரியாக ஒப்புவித்தல் அல்லது எழுத்து வடிவில் வெளிப்படுத்துவதாகும்
இந்த தகுதியை பெறுவதற்க்கு சிந்திக்கும் ஆற்றல் தேவை இல்லை மாறாக படித்த செய்திகளை மனனம் செய்யும் நினைவாற்றலே போதுமானது
லிம்பிக் சிஸ்டப்படி
(படைப்பின் இயற்கை படி ) ஆண்களை விட பெண்களே அதிகமான நினைவு திறன் பெற்றவர்கள்
இந்த திறனை இயற்கையாகவே பெற்றிருப்பதின் காரணத்தால் தான் ஆடவர்களை விட பெண்களே இது போல் விசயங்களில் முன்னியில் இடம் பெறுகின்றனர்
அதே நேரம் சிந்திக்கும் திறனில் இயற்கையாக பெண்களை விட ஆடவர்களே அதிகம் திறன் பெற்றிருப்பதால் தான் கண்டு பிடிப்புகளில் ஆண்கள் முன்னனி வகிக்கின்றனர்
2 நினைவாற்றலில் குறைவான தகுதியை பெற்ற ஆடவர்கள் அவர்கள் பெற்றுள்ள நினைவாற்றலை விட தேர்வு நேரங்களில் கூடுதலாக பின்னடைவை சந்திப்பதற்க்கு மூல காரணம் தற்கால படிப்பு முறையாகும்
ஆண்களும் பெண்களும் ஒன்றாக இணைந்து படிக்கும் கலப்பு முறை ஆடவர்களின் எண்ணங்களை மேலும் பலவீனப்படுத்துகிறது
படிக்கும் நேரம் வேறு பல எண்ணங்களில் ஆடவர்களின் மனம் அலைபாய்வதால் தான் அவர்களால் தகுதிக்கு ஏற்ற தேர்சியை கூட பெற இயலவில்லை
இந்நிலை மாற வேண்டுமானால் ஆண் பெண் இணைந்து படிக்கும் விதிமுறைகள் கல்வி விசயத்தில் மாற்றப்பட வேண்டும்
மனிதனின் பலவீனங்களை புரிந்து அதற்க்கு ஏற்ற நிலையில் சட்டங்களை சூழ்நிலைகளை அமைத்து கொடுப்பது தான் சமுதாய முன்னேற்றத்திற்க்கு வழி வகுக்கும்
இந்த சாதாரண பகுத்தறிவை கூட பெறாதவர்கள் தங்களை படித்தவர்களாக பெறுமை படுவது வேதனையான விசயம்
عَنْ أَبِي ذَرٍّؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: قَدْ أَفْلَحَ مَنْ أَخْلَصَ قَلْبَهُ لِلْإِيمَانِ وَجَعَلَ قَلْبَهُ سَلِيماً وَلِسَانَهُ صَادِقاً وَنَفْسَهُ مُطْمَئِنَّةً وَخَلِيقَتَهُ مُسْتَقِيمَةً وَجَعَلَ أُذُنَهُ مُسْتَمِعَةً وَعَيْنَهُ نَاظِرَةً.
எவர் ஈமானுக்காக தனது உள்ளத்தை (குஃப்ர், ஷிர்க்கை விட்டும்) தூய்மைப்படுத்தி
அதை (உலகப் பற்றை விட்டும்) அமைதியாக்கி
தனது நாவை உண்மையானதாக்கி
தனது நப்ஸை (அல்லாஹ்வின் நினைவாலும், அவனது திருப்திக் கேற்றவாறு நடப்பதாலும்) நிம்மதி உடையதாக்கி
தனது குணத்தை (தீமைகளின் பால் ஈடுபாடு கொள்ளாமல்) சீராக்கி
தனது காதுகளை
(நல்ல விஷயங்களை) ஏற்றுக் கொள்ளும் தன்மையுடன் கேட்கக் கூடியதாக்கி
தனது கண்களை (நல்லவைகளை கவனமாக) பார்க்கக் கூடியதாக்கினாரோ அவர் நிச்சயம் வெற்றியடைந்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment