உங்கள் ஓட்டு யாருக்கு

       உங்கள் ஓட்டு யாருக்கு

             <>_<>_<>_<>_<>
                    31-03-19
        J . யாஸீன் இம்தாதி
           *******************

இவர்களே நல்லவர்கள்
இந்த கட்சியே நல்ல கட்சி
என்ற நம்பிக்கையில் யாருக்கு நீங்கள்  ஓட்டு போட்டாலும் நம் அரசியல்வாதிகளின் எதார்த்த குணாதிசயங்களை  சரியாக  புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை

குடி மக்களுக்கு தொண்டு புரியும் நல்ல கட்சிகளுக்கு  தான் ஓட்டு போட வேண்டும் நீங்கள் உறுதியாக  முடிவு செய்தால் அதற்கான காலத்தை நீங்கள் இதுவரை எட்டவில்லை

அல்லது கட்சி சார்ந்தே நீங்கள் சிந்தித்தால் எந்த ஒன்றிலும் சமுதாயத்தின்  நலன் சார்ந்த விசயங்களை  உங்களால் முடிவு செய்யவே முடியாது

காரணம் அர்ப்பமான சேவைகளை தியாகங்களை  அனைத்து கட்சிகளும் தங்களது சுயநலனுக்காக குடி மக்களுக்கு செய்தே வருகிறது

தற்போது பார்க்க வேண்டிய ஒரே அரசியல் பார்வை

மதவாத கூட்டனியின் வெற்றியா  ?
அல்லது மதசார்பில்லாத கூட்டனியின் வெற்றியா   ?

அவ்வகையில் மதவாதத்தையும் மதவெறியையும்  வெளிப்படையாகவே காட்டி வரும் ஒரே இந்திய கட்சி பீஜேபி கட்சியாகும்

சிறுபான்மையினர்களுக்கு

தற்போதைய சூழலில் அழகிய அரசியல்  தத்துவம் பேசுகின்ற நேர்மையானவர்களுக்கும்  புதுமையானவர்களுக்கும் நீங்கள் ஓட்டு அளித்தால் அந்த ஓட்டுக்களும் நீங்கள் உங்களை அறியாமலேயே பீஜேபி கட்சிக்கு செலுத்தும் ஓட்டுக்கள் தான்

இத்தகையவர்களுக்கு ஓட்டு போடுவதும் நோட்டோவுக்கு ஓட்டு போடுவதும் தரத்தில்  ஒரே நிலை தான்

எனவே ஓட்டு செலுத்தும் முன் வரட்டு தத்துவங்களையும்  கட்சிகளின் மீது இருக்க கூடிய பக்திகளையும்  தூர கலைந்து விட்டு சமுதாய அக்கரையோடு செயல்படுங்கள்

                 J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்